குழந்தைகள் சூழ்ந்த வானம் பாரதிஜிப்ரான்
எவ்வகை குடும்பங்களாக இருந்தாலும், அதின் பெற்றோர்கள் தங்கள் சுழநலத்தை கணக்கீடு செய்தே குழந்தை வளர்ப்பு முறையை கையாள் கிறார்கள். குழந்தைகள் அவர்கள் இயல்பு அடிப்படையில், பெரும்பாலும் சுதந்தரத்தை அனுபவிக்க விடுவதில்லை. இப்படியான சூழலில்தான், குடும்பங்களில் தங்கள் சாகசங்களை காட்டமுடியாமல், சமூக வெளிகளில் நடத்திக்காட்டி விடுகிறார்கள்.
அப்படி நடத்திக்காட்டுகிற குழந்தைகளின் உணர்வுகளை இயல்பு மாறாமல் நண்பர் பாரதிஜிப்ரான் தனது கவிதைகளில் பதிவு செய்கின்றார்.
....அன்று பிறந்த ஈரம் காயாத
குழந்தைக்குக் கதகதப்பூட்ட.
என்று முடிகிற கவிதையில், தற்காலத்தில் பிறக்கும் அநேகக் குழந்தைகள் கண்ணாடிப் பெட்டியை பார்க்காமல் வருவதில்லை, எல்லோருக்கும் முடிவில் ஒரு பெட்டி இருக்கிறது என்பதின் அடையாளமா? (குறிப்பு- பெட்டி என்பது, ஒப்புமைக்காக குறிக்கப்பட்டுள்ளது.) ஏன் இப்படி? யார் காரணம்? என்ன குறைபாடு? என்றே தெரியவில்லை. பொதுவாக பதினைந்து வருஷம் முன்பெல்லாம் குழந்தைகள் நேரடியாக தாயின் அரவணைப்பில் கத கதப்புடன் தூங்கும், இப்போதெல்லாம் பிஞ்சு குழந்தைகளுக்கு உடனே அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. அதனால் கவிஞர் கடல், மலைகள் கடந்து, பூக்களின் வாசத்தோடு சூரியனை அழைக்கின்றார்.
சாரைப்பாம்பாய்
நெளிந்து நெளிந்து நீளும்
ஒத்தையடிப்பாதைகளில்
வகுப்பறை மீண்டு
வீடு நோக்கி ஓடும்
வீடு நோக்கி ஓடும்
குழந்தைகளின்
மகிழ்வின் நிழல் உரசி
மணக்க மணக்க விழுகின்றன
பனம் பழங்கள்.
உலகமயமாதல், பொருளாதாரக் கொள்கை, வல்லரசு என்கிற சூப்பர் ஈரோக்களின் புழக்கங்கள் அதிகமாக இருக்கும் இச்சூழலிலும் சரியான சாலையில்லாமல் கிராமக்குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இன்னும் பல மையில்கள் தூரம் ஒத்தையடி பாதையில்தான் நடக்கவேண்டியிருக்கிறது. தொழிற்கூடங்களில் முதலாளியின் சண்டித்தனங்களை பொறுத்துக்கொண்டு மனச்சோர்வுடன் பள்ளியிலிருந்து திரும்புகிறார்கள். வீட்டிற்கு போனாலும் அம்மா வந்து சமைக்கும் வரையிலும் வீட்டில் சாப்பிட ஒன்றுமே இருக்கப்போவதில்லை. என்று யோசித்துக் கொண்டேதான் செல்கிறார்கள் பல பள்ளிக் குழந்தை என்பதை அற்புதமாக சொல்லுகிறார்.
தங்களின் தன்நலமிக்க, குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் வாழ்வைக் கடத்துகிறவர்கள் யாருமே, பிறர் மனம் நோகுமென்று கணிப்பதேயில்லை. இவர்கள்தான் மாற்றுத்திறனாளிகளை, முதியோர்களை குருடு, செவிடு, முடமென்று ஏளனமான வார்த்தைகளை சட்டென வீசிவிடுகிறார்கள் அதன் வலி தெரியாமல்’ என்று ஒரு கவிதையில் ஆதங்கப்படுகிறார்.
சாளரக் கம்பிகளில்
ஊஞ்சலாடுகின்ற நீர்த்துளிகள்.... என்று தொடங்கும் கவிதையில்
இயற்கையின் அழகை மிகவும் நுண்தன்மையுடன் ரசித்து வெளிக்கொண்டு வருகிறார். ஒரு மழை நாளில், சன்னல் கம்பிகளில் வருசையான முத்துக் களைப்போல் தொங்கும் மழைத்துளிகளை ரசிக்கிறார். எப்போதும் போலவே அன்றயபொழுது தனக்குப் பிடித்தும் பிடிக்காமலும் நகர்கிறது. எப்படி இருந்தாலும் வயிற்றுக்கான தேவையை தேடவேண்டியிருக்கிறது, தேடலின் பலனாக சற்று ஆசுவாசமும் ஏற்படுகின்றது. ஆனால் சுற்றி நடக்கும் நாடு கடந்த மனித வதைகளை நினைத்து மனம் பதைத்து விடுகிறது.
....இளைப்பாற பாறை மீதமர்ந்த
கடவுளுக்குப் புடட்ம் புழுத்தது......
என்று உள்ளடங்கியக் கவிதையில் கடவுள் ஒரு அப்பாவியாக, மனிதன் திறமைசாளியாக சித்தரிக்கின்றார். ஒரு கட்டத்தில் கடவுள் மனிதனுக்கு பயந்து ஓடுகின்றார். அப்படி ஓடுகின்ற கடவுள் குழந்தைகள் கூட்டத்தில் நுழைந்து நாம் தங்கும் சரியான இடம் இதுதான் என்று நிம்மதி அடைகின்றார். இத்தொகுப்பிலேயே இதுதான் நீண்ட கவிதை. சற்று நெருடலும் ஏற்படுத் திவிடுகின்றது. பிறந்த குழந்தையையும், சைக்கிள் டயரில் வண்டிப் பயணம் செய்யும் குழந்தைகளையும், குழந்தைகள் என்றேக் கணக்கிடுகின்றார். நடை முறையில் இருப்பதுபோல் சரிதான். ஆனால் தற்காலத்தில் ‘பிரிக்கேஜ்’ சேர்க்கும்போதே குழந்தைகளின் மூளையில் மெல்ல மெல்ல நச்சு வார்த் தைகள் உபதேசிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஐந்து, ஆறு வயதுகளுக்குள் பிறரைபழித்தல், தனக்கானதாக தனக்காக மட்டும்பொருளை பத்திரப்படுத்தல் போன்ற பொதுநோக்கற்றத் தன்மை பெற்றோர்களுடன் சேர்ந்து சமூகமும் கட்டமைத்து போதித்து வருகிறது. டயர் ஓட்டுகிற வயதொத்த குழந்தைகளிடம் கடவுள் புகுவது என்பது கடினம்தான். ஒருவேளை தற்காலச்சூழலில் தாயின் முலைக்காம்பை தன் வயிற்றுப் பசிக்காக இன்னும் மறக்காமல் இருக்கும் குழந்தைகளிட்ம் வேண்டுமென்றால் கடவுள் நுழைந்து ஐக்கியமாகும் வாய்ப்பு இருக்கலாம்.
....சாகும் மனிதர்களை
இலவச தொலைக்காட்சியின் வழியே
பார்த்துக்கொண்டே
மெல்ல நகர்கிறது
நம்முடைய இரவும் பகலும்.
சூரியனாய், நிலவாய் மறைந்து மறைந்து தோன்றாமல், வானத்தின் உச்சியில் இரவும், பகலும் ஓய்வே இல்லாமல் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் ஈழத்தின் ரத்த ஒழுகலை உலகமனைத்தின் கண்களும் ரசிக்கின்றதா? தங்கள் கோர முகத்தாலே அக்கொடூரத்தை காணமுடியாமல் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் பல கவிதைகளில் ஈழத்தின் வேதனையை அங்கு மனிதர்கள் வாழ்வதற்காக கண்ணீரை மட்டுமே அருந்தும் நிலையை கவிஞர் உரத்தக் குரலில் பதிவு செய்கிறார்.
....மழையில்லா இரவைவிட
மின் விளக்குகள் எரியாத இரவு
அவர்கள் மகிழ்வை நீட்டிக்கச் செய்கிறது .....
.......
மனைவியின் பூரண உடலைக் காணாத
கணவனும்
கணவனின் பூரண உடலைக் காணாத
மனைவியும்.
எல்லாம் இருக்கும் நாட்டில், தனக்கென்று எதுவுமே இல்லாமல் எங்கள் நாடு எங்கள் நாடு என்று ஆக்ரோஷமாக ஆதரவு குரல் கொடுக்கிறார்கள் விளிம்பு நிலை மக்கள். இதே நாட்டில் எல்லாம் நிறைவாகப் பெற்றவர்கள் அம்மக்களைச் சுற்றியே வாழ்கிறார்கள். நிறைவாக பொருள் பெற்ற மனிதர்களும், அதிகாரம் கையகப் படுத்தியுள்ளவர்களும் அடிக்கடி விளிம்பு நிலை மக்களின் ரத்ததை தங்கள் நலனுக்காக பரிசோதித்து வைத்துக் கொள்கிறார்கள் என்ற கருத்தை ஆழமாக சித்தரிக்கிறது.
நண்பர் பாரதிஜிப்ரான் கவிதை உலகம், இத்தொகுப்பில் குழந்தைகளின் இருப்பை அதிகமாகப்பேசினாலும், கூடவே சமூகத்தில் நடமாடுகின்ற ஒரு சாரார் ஆதிக்கம், உலகநாடுகளில் வாழ்விழந்தோர் மேலும் தொடர்ந்து வலுவுள்ளோரால் கைவிடுதல், இத்தனைக் கொடூர மனித முகங்களை நினைத்து நினைத்து ரத்த அழுத்தம் ஏறி வாசகன் உடலை கெடுத்துக் கொள்ளாதபடி அங்கங்கே இயற்கையின் அற்புதமான அழகியலை அதன் நுண்கலை குன்றாமல் இச்சமூகப் பயன்பாட்டிற்கு படைத்து தந்துள்ளார்.
சில குறைபாடுகளாக நான் பார்ப்பது ஒரு பக்கத்தில மூன்றுவரி, நான்கு வரிக் கவிதைகள் பல தவிர்த்திருக்கலாம் அவைகள் இருந்துவிட்டு போகட்டும் என்கிற அளவுக்கு மற்ற கவிதைகளைப்போல சிரத்தை எடுத்து எழுதப்பட்டதாகவும் தெரியவில்லை. அட்டைப் படத்திற்கு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இவைகளைத் தவிர்த்து ‘குழந்தைகள் சூழ்ந்த வானம்’ தனித்து கவனம் செலுத்தவைப்பதாகவே இருக்கிறது.
ஜேடி

No comments:
Post a Comment