எருசலேம் தேவாலயத்தில் இன்னும் பரபரப்பு அடங்கவில்லை. நடு இரவை கடந்து விட்டபோதும் அங்கங்கே கூடிக்கூடி ஒருவரோடொருவர் நியாய அநியாயங்களை சத்தம் வெளியில் கேட்க்காமல் விவாதித்தனர். மேல் காற்று சற்று உருமலுடன் புழுதியைக் கலந்து வீசிக்கொண்டிருந்தது. ஆலயத்தின் உயர்ந்த சுவர்களில் அங்கங்கே தீப்பந்தம் எரிந்திருந்தது. காற்று சற்று வேகத்தை எட்டும்போது மட்டுமே தீப்பந்தம் அலை பாய்ந்தது. தூரப்பார்வைக்கு இருட்டு வான்வெளியில் நட்ச்சத்திரங்களைப்போல் ஆலயத்தின் வளாகம் தெரிந்தது. கிட்டத்தில் வரும்போது மின்னலாக அலைபாயும் மஞ்சல் வெளிச்சத்தில் பரந்த எல்லைக்குள் தேவாலயம் பிரமாண்டமாய் தெரிந்தது. ஆலயத்தின் எதிர் முனையில் நூற்று அய்ம்பதடி நீலமும் நூற்றுஅய்ம்பதடி அகலமும் கொண்ட பலிபீடமேடையும் இரண்டேகால் நீளம் இரண்டேகால் அகலம் ஒன்றரை அடி உயரமான தனியான கல் பலிசெலுத்தும் மேடையில் நான்கு இடத்தில் இருந்தது. வீசி எறியப்போகும் மாமிசத்துக்காக கூண்டில் காத்திருக்கும் வேங்கையாக பலி மேடை அந்த இருட்டிலும் ஆவேச முச்சிவாங்கிக் காத்திருந்தது.
யூதாஸ் ஏறக்குறைய இரண்டு நாட்களாய் சாப்பிடவில்லை. பெத்தானியாவில் குஷ்டரோகியாய் இருந்த சீமோன் வீட்டில் கடைசி ராபோஜன பந்தியில் சாப்பிட்டதோடு சரி. அதன் பிறகு பிரதான ஆசாரியன் வேதபாரகன் இவர்களிடத்திற்கும் அதன் பிறகு ஒலிவமலைக்கும் கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறத்தில் உள்ள தோட்டத்திற்கும் அலைந்து அலைந்து மிகவும் சோர்ந்துபோய் இருந்தார். ஏறக்குறைய ஆலய வளாகத்தில் இருந்த அநேகருக்கு அவர் முகம் அடையாளப்பட்டிருந்தது. மொத்த உடலும் சோர்வடைந்திருந்ததால் அவர் தொங்கள் ஆடை இன்னும் தடை செய்தது. இன்னேரம் விழுந்திருப்பார். புழுதியில் புதைந்திருந்த கல் ஒன்று தட்டியது. தடுமாறினார் விழவில்லை இரு கைகளிலும் மார்போடு அணைத்திருந்த அந்த சிறிய மூட்டையை விடவில்லை.
ஆலய வாசலைக் காக்கிறவன் இவர் முகத்தை அறிந்திருந்ததால் சற்று பேசாமல் இருந்தான். வந்தவர் ஆலயத்தின் பலிபீடத்தையே உற்று பார்த்து நடந்தபோதுதான் வாசல் காக்கிறவன் ''அய்யா இந்த நேரத்தில் யாரைப் பார்க்கப் போகிறீர்கள் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் பரிசேயரும் பரிசுத்த ஆடையிலே பலிபீடத்தண்டையில் இருக்கிறார்கள். பரிசுத்த ஆடை கலைந்து வீட்டுக்கு வருவார்கள் அப்போது வேண்டுமென்றால் நீங்கள் பார்க்கலாம். இபோது நீங்கள் வேருயாரையாவது அவசரமாய் காட்டிக் கொடுக்க வேண்டுமா தெரிந்தால் நான் பிரதான ஆசாரியரிடத்தில் அனுமதி கேட்டு வருவேன். அதை கேட்டதும் ஆலய வாசலுக்கு நேர் எதிராகமுகம் குப்புற விழுந்தார். கையில் வைத்திருந்த சிறு முடிப்பில் தன் நெற்றியை இடித்துக்கொண்டு அழுதார். வேகமாக எழுந்தார் கேருபீன்களும் பேரிச்சை மரங்களாலும் சித்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரமாண்டமானக் கதவை திறந்தார். பிரதான ஆசாரியர் பரிசேயர் வேதபாரகர் அதிகாலை முதல் வேலையாக இயேசுவை பிலாத்துவிடம் ஒப்படத்து விடுவதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் எப்படியான தீர்ப்பு கொடுப்பாரோ ஒரு வேளை அவருடைய தீர்ப்பு நமக்கு அதிருப்தியாய் இருந்தால் மக்களை பேசவிட்டு நமக்கு சாதகமாக காரியத்தை சாதிக்கவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். பலிபீடத்தில் குத்துவிளக்குகளில் எண்ணைக் குறைந்து சுடரொளியும் குறைந்திருந்தது. சுகந்த வசனையின் புகை எழும்பிக்கொண்டிருந்தது.
யூதாஸ் நிராயுதபாணியான ஒரு அடிமையைபோல் அவர்களுக்கு நேராக விழுந்து ''அய்யா நான் தவறு செய்துவிட்டேன்.நீங்கள் கொடுத்தப்பணம் இதோ அப்படியே இருக்கிறது நான் இந்த பணத்தின் முகத்தை கூட பார்க்கவில்லை இதை எடுத்துக்கொண்டு ஒருதவறும் செய்யாத அவரை விட்டுவிடுங்கள்.''
''யூதாஸ் நீ மட்டுமா இயேசுவுக்கு சீஷனா இருந்த மற்ற பதினோரு பேரு எங்க அவுங்கயாரும் வந்து ஒரு வார்த்தை கூட கேட்கலியே காட்டிகொடுக்கறதுகும் கோள் சொல்றதுக்கும் கூட சில நியாயமான காரணமிருக்கும் ஆனா உயிர் நன்பனாப் பழகியிருக்கான் குருவாயிருந்திருக்கான் உங்களோடு உண்டு உறங்கியிருக்கான் அப்படிப்பட்டவன் ஆபத்தில சிக்கினபோது அனாதையா விட்டிடுட்டு ஓடுனாங்களே அதுதான் மிகப்பெரிய கொலைப்பாதகச்செயல் அவுங்களுக்கு வராத பாவம் உனக்கு வராது போ. அந்த காச வச்சி இனிமேலாவது எதாவது பொழைக்கிற வழியப்பாத்துக்ககோ."
"அய்யா நீங்க சொல்றது நாயமாதெரியிது. ஆனா அவுரு ரொம்ப நல்லவருய்யா எனக்குத் தெரிஞ்சி ஒரு குத்தமும் செய்யலையா இந்த ஒரு முறை உட்டுடுங்கையா. நீங்க கொடுத்தப்பணம் அப்பிடியேயிருக்குதுய்யா இந்தாங்க. எடுத்துக்குங்க."
"அவுரு ரொம்ப நல்லவர்தான் எங்களுக்கும் தெரியும் அவுரு நல்லவரா இருந்தா நாங்க எல்லாரும் நல்லவங்களா இருக்கமுடியுமா? எங்கள் ஒட்டு மொத்தமா கெட்டவங்கனு அவுருசொல்லலாமா? நாங்க எங்க மூதாதையர் காலத்திலிருந்து வழிவழியா ஆசாரியப்பணி செய்துவருகிறோம் இவுரு எப்ப வந்தாரு பத்து பேருக்கு மத்தியில் எங்கள தரகுறைவா பேசலாமா? நாங்க பாத்துக்கிட்டு சும்மாஇருப்போமா? யூதாஸ் இவ்ளோ நேரம் உன்கூடபேசினதே நாங்க கஷ்டப்பட்டு செய்யவேண்டிய வேலையை நீ சுலபமாக் கினியேனுதான். அதெல்லாம் எங்க கைய மீறிப்போச்சி இனி நாங்க ஒன்னும் செய்யமுடியாது. போ...போ... போ போய் வேலையப்பாரு. நாங்க சொல்றத கேக்கலனா அதுக்கப்புறம் உன் பாடு" என்று பக்கத்தில் இருந்த அறைக்குச் சென்று பரிசுத்ததிற்குரிய ஆடையை கலைந்து பொதுவான ஆடையை உடுத்திக்கொண்டு பிரதான ஆசாரியன் வீட்டில் இருக்கும் இயேசுவின் காவலை இன்னும் பலப்படுத்தி விழிப்புடன் இருக்கும்படி எச்சரித்து விட்டுப் போனான்.
யூதாஸ் மிகவும் மனமொடிந்து கையறு நிலையானபோது பண முடிப்பைதூக்கி எறிந்தார். பண முடிப்பு எறிந்த வேகத்தில் ஆலயத்தின் பாடல் குழுவில் வாசிக்கப்படும் தம்புரு கின்னரங்களின் இசையைபோல் ஒலித்தது. ராயனுடைய தலையும் சின்னங்களும் ஒரு போர் சிதைவை சந்தித்ததுபோல் நாலாபக்கமும் சிதறி முட்டி மோதி ஒன்று தலை தெரியும்படியாகவும் ஓடி விழுந்தது. ஆலயத்தை காவல் காக்கிற ஆசாரியன் பிரதான ஆசாரியனிடத்தில் ஓடிச்சென்று " அய்யா யூதாஸ் வெள்ளிக்காசுகளை பலிபீடத்திற்கு நேராக வீசி எறிந்துவிட்டார்." என்ற காவலன் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தான் ஆசாரியனுக்கு சாதகமானவன் என்பதை உணர்த்துவதில் கவனமாய் இருந்தான்.
"அவன் பயித்தியக்காரன் வீசி எறியட்டும் அந்தகாசை பொறுக்கிவை வேறு எதாவது பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். முதலில் யூதாஸை ஆலயத்திலிருந்து விரட்டிவிடுங்கள்."
ஆலய காவலன் உள்ளே வருவதற்குள் இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் வந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டு ஆலய வளாகத்தில் குடியிருந்தவர்ளின் வீடுகளிலிருந்து ஒரு சிலர் கூடி விட்டார்கள் 'இவன்தானே காட்டிகொடுத்தான். இப்போ இவனே வந்து உட்டுங்கோ என்கிறானே. இவன் இன்னா பயித்தியமா' என்று பேசிக்கொண்டார்கள். யூதாஸ் ஆலயத்தின் உள் வடிவத்தை சற்று ஆழ்ந்து பார்த்துக்கொண்டுவந்தார். சன்னல் வழியாக காற்று வேகமாக வீசியது. சன்னலின் திறைச்சீலைகளும் தலைவாசலின் சீலைகளும் பறந்தது. பறந்தது மூடியது. அரங்கத்தின் தூன்களில் உயரத்தில் கேருபீன் பேரிச்சை மரங்களால் சித்தரிக்கப்பட்ட மனித முகம் யூதாஸை பார்த்து ஏலனமாய் சிரித்தது. மறுபக்கம் சிங்கத்தின் முகம் ஆவேசமாய் கர்ஜுசித்ததுபோல் இருந்தது. பலகையில் சித்திர வேலைபாடுடன் அலங்கரிக்கப்பட்ட உள் அமைப்பு மெளிதான மஞ்ஜல் வெளிச்சத்தில் மின்னியது. ஆந்தையை விரட்டும் காக்கைபோல 'ஆலயத்தை விட்டு வெளியே போ...வெளியே போ...' என்று விரட்டினார்கள்.
யூதாஸ் மெளனமாக வெளியே நடந்தார். பிரதான ஆசாரியன் வீட்டுக்கு சற்று தள்ளி சிறு கூட்டம் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துக் கொண்டிருந்தார்கள். ஆண்களும் சில பெண்களும் போர்வையோடு நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் அந்தகூட்டத்தில் ஒன்றியிராமல் நெருப்பின் கதகதப்பை உணர்ந்தவராக தனிமையில் தவித்தார். பிரதான ஆசாரியனின் பக்கத்து வீட்டில் ஒருவன் தன் கூண்டிலிருந்து கோழிகளை திறந்துவிட்டான். அதில் சேவல் ஒன்று எதிர் வீட்டில் இன்னும் திறக்காமல் இருக்கும் கோழியின் வரவை பார்த்துகத்தியது. சேவலின் சத்தம் கேட்டதும் அவர் மட்டும் கூட்டத்திலிருந்து விலகிச்சென்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதார். அழுதவர் நிமிர்ந்தபோது தள்ளாடிச்சென்ற யூதாஸைப்பார்த்தர். அவர் யூதாஸைப் பார்த்ததும் முகத்தைதிருப்பிக்கொண்டார். யூதாஸ் தள்ளாடும் நடையை வேகப்படுத்தினார். நடந்துகொண்டேயிருக்கிறார். நகரத்தின் எல்லை முடிந்தது. வழித்தடங்கள் இல்லாமல் பாறைகளும் முட்செடிகளும் மரங்களும் கண்ணுக்கெட்டிய தூரம் மலைகளுமாய் இருந்தது. கரும் மேகங்கள் கல்லாகிவிட்டதைப்போலவும் ஒழுங்கின்மையாய் இருந்தது. யூதாஸ் ஏதோ திசையில் நடந்தார். தனக்கு தானே பேசினார்.
"ஆண்டவரே எல்லா சீஷனைப்போலவே நானும் இருந்திருக்கக்கூடாதா என்னிடத்திலே எதற்கு வரவு செலவு கண்ககை கொடுக்கனும் நீங்க எல்லா நேரத்திலும் நீதியாய் இருந்தீங்க அதனால வருமானம் சரியானபடி இல்ல சில நேரத்தில நான் சிக்கனமா இருக்கவேண்டிய சூழ்நிலை வந்துச்சி அதனால தான் கடைசி ராபோஜனத்துல அந்த பொம்பள விலை அதிகமான பரிமளத்தைலதை உங்க தலை மீது ஊத்தும்போது கொஞ்சம் சத்தம் போட்டேன்." என்று நடந்தவர் திடிரென ஒரு சமமான பாறைமீது உட்கார்ந்தார். உட்கார்ந்தபோது காலளவு தொங்கியிருந்த ஆடை பக்கத்திலிருந்த சிறிய முள்ளுச்செடியில் சிக்கிக்கொண்டது. சடார்ரென்று பிடித்து இழுத்தார் . எதற்காகவும் வருந்தவில்லை . இழுத்தவேகத்தில் செடி அடிவரை சாய்ந்து நிமிர்ந்தது. அங்கிருந்து சிறிய பாம்பு ஒன்று பாறை இடுக்குகளில் புகுந்தது. அதை பார்த்ததும் என் ஆண்டவனையே அசைத்துப் பார்த்தவனாச்சே நீ இந்த பூமியில் எத்தனை ஆயிரம் தலைமுறையானலும் நீ மட்டும் எப்போதும் இளமையாகவே இருந்து புதுமையான அழிவுக்கும் வளர்ச்சிக்கும் துனைபோகிறாய் போ... போ... என்று எழுந்து நடந்தார்.
நடையில் தளர்ச்சி ஏற்பட்டதால் இரு பாறைகளுக்கு இடையில் நுழைந்து போனார். பாறையில் கைவைத்து தாங்கியபடி நடந்தார். பாறை சூடேறியிருந்தது. புல்லும் பூண்டும் காற்றின் திசைக்கேற்ப சந்தோசமாய் சாய்ந்தாடியது. அதை அவர் கவனிக்கவேயில்லை. வேகமாக நடந்தார்." ஆண்டவரேநான் புத்தி கெட்டு செய்துவிட்டேன் ஆனா இப்படி செய்வாங்கனு நெனைச்சிப்பாக்கலையே நீங்க இந்த நாட்டுக்கு ராஜாவா வருவீங்கனு நாமலும் ஒரு நெலமைக்கு வந்திடலாமுனு நெனைச்சேன் ஆனா அதெல்லாம் நடக்காதுங்குறா மாதிரி நீங்க தேவலயத்துல பிரதான ஆசாரியனையும் உயர் பதவியில் இருக்கிறவர்களையும் கடிந்துகொண்டீர். அப்போதே என் மனசு ஒடஞ்சிப்போச்சி. பிரதான ஆசாரியன் உங்கமேல கோபமாயிருந்ததால் அதிகாரத்தில் இருக்கிறவர்கள் முலமாகவே உங்களுக்கு சிறிய கஷ்டங்கள் கொடுத்தால்தான் உங்களுக்கு அதிகாரத்தின்மீது ஆசை ஏற்படும். நீங்க மனசு மாறுவீங்க அதுவுமில்லாம ஒரு முறை சூம்பின கையையுடைய ஒருவனை ஓய்வுநாளில் குணமாகினபோது பரிசேயர் எல்லாம் உங்களை கொலைசெய்ய வைகை தேடினாங்க அந்த நேரம் அவுங்க கண்ணுக்கு மறைஞ்சி போயிட்டீங்க. அதப்போல இப்பவும் போயிடுவீங்கனுதான் நான் உங்களை முத்தம் செய்தேன் . இப்படி கொலைசெய்ய துனிவாங்கனு நெனைக்கலையே. ஒரு கொலைகாரன்னு சொன்னாக்கூட பரவாயில்லையே காட்டிகொடுத்தவன்னுதானே வரும் சந்ததி என்னைப்பழிக்கும்" என்று தன்னைத்தானே தலையில் அடித்துக்கொண்டார். அவர் கால்களுக்கு எந்த இலக்கும் இல்லாமல் இருந்தது.
ஆண்டவரே பிலாத்து என்ன தீர்ப்பு செய்தானோ! மொத்த அதிகாரிகளும் ரொம்ப தீவிரமாய் இருந்தார்களே. பூரனமான நல்லவர்களை இந்த உலகம் பக்கத்தில வச்சிக்கவே மாட்டுங்குதே அதுக்கு நானும் காரணமாயிட்டேனே கொஞ்ஜ நாள் முன்னாடி உங்களை சிலுவையில் ஒப்புக்கொடுக்கப் போறாங்கனு நீங்க சொன்ன போது உங்க பக்கத்தில இருந்தபேதுரு அது நடக்கக் கூடாதுனு சொன்னார். அதுக்கு கோபமா ' அப்பால போசாத்தானேனு ஏன்சொன்னிங்களோ' என்றவர் மரத்திடம் வந்துவிட்டார். அதை சற்று நேர நிதானத்திற்கு பிறகுதான் உணர்ந்தார். நிமிர்ந்து மரத்தைப் பார்த்தார். மரக்கிளையின் இடைவெளியில் வானத்தின் இயல்பு நிலையில் சற்று மாற்றம் தெரிந்து. தொடையின் புஜம்போல வெளியில் தெரிந்து பூமியில் மரைந்திருந்த மரத்தின்வேர் மீது உட்கார்ந்தார் .மரத்துக்கு மேலே உயரத்தில் வல்லூறுகள் சுற்றிக்கொண்டிருந்தன. மரத்தின் கிளைகள் படர்ந்து மிகவும் தாழ்வாக இருந்தது. மரத்தின் நிழல் அவர் உட்கார்ந்திருந்த எல்லைக் குள்ளேயே இருந்தது. அவர் உணரவில்லை.
"ஆண்டவரே நான் உம்மோடு இருந்தபோது கணக்கில்லா ஆண் பெண்ணுக்கு மன்னிப்பும் பாவ நிவாரணம் தந்து நல்ல வழ்வையும் தந்தீர் எனக்கு அடிப்படிப்பட்ட மண்ணிப்பு கிடைக்குமா உம் முகத்தை பார்த்தல் என் மீது மனம் இறங்குவீர் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனால் என்னை குற்றப்படுத் திக்கொண்டே இருப்பார்கள். நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை "என்று மரத்தை அன்னாந்து பார்த்தார். மரத்தின் கிழ்பகுதி மிகவும் கனமாயிருந்தது. என் ஆண்டவர்.இதை எல்லாம் எனக்கு பழக்கப்படுத்த வில்லையே நான் என்ன செய்வேன். நான் எப்படி ஏறுவேன் குழம்பினார். எப்படி மாய்த்துக்கொள்வது ஒன்றும் விளங்கவில்லையே என்று அழுதார்.
கண்களில் தேங்கியிருந்த தண்ணிரால் எந்தபிம்பமும் சரியாய் தெரிய வில்லை. கண்ணுக்கெட்டியதூரம் வெறுமையாய் கிடந்தது பூமி. கண்ணிரை துடைத்தபோதுதான் கொல்கதா மலை மிகவும் தொலைவில் பிரமாண்டமான யானையின் முதுகைபோல் கிடந்தது அவர் பார்வைக்கு.
எழுந்து தன் மேலாடையை உருவினார்.உயரம் தாழ்வானகிளையை எட்டினார் .எட்டவிலை. இரு கல்லை மரக்கிளைக்கு நேரகப்போட்டு அதன் மீது ஏறி முடிச்சிப்போட்டார்.சட்டையின் கைபகுதி தன் கழுத்தில் மாட்டிக்கொண்டார். கல்லின் மீது ஏறி நின்றார். மரக்கிளையில் கட்டியிருக்கும் கயிறு சரியா என்று சற்று அழுத்தம் கொடுத்துப்பார்த்தார். சரியாக இருந்தது. ஆண்டவரே என்னை மண்ணித்துவிடு என்று கல்லிலிருந்து குதித்தார். குதித்ததும் மரக்கிளை தாழ்ந்து அவர் கால்கள் தரையில் நின்றது. கழுத்தின் முனை சரியாக இ\றுகவில்லை மீண்டும் செய்தார். அதேபோலவே கால்கள் தரையில் நின்றன. தன்னை அறியாமல் கைகள் மேலே உயர்ந்தது. கட்டுப்படுத்தி கீழே இறக்கினார்.
நம் புழுதி
நன்றி 'புதியகோடாங்கி'
1 comment:
அன்புள்ள டேனியல், இந்தக்கதையின் மொழி நடையில் மிகவும் மாற்றம் தெரிகிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment