இரண்டு, நாலு வகுப்புகள் படிக்கும்
பிள்ளைகளின் தாய்
மௌனமான வாயசைப்புகளை
சாலையைக் கடக்கையில்கூட கையாள்கிறாள்
கடந்த மூன்று மாதங்களாக.
பிள்ளைகளின் தாய்
மௌனமான வாயசைப்புகளை
சாலையைக் கடக்கையில்கூட கையாள்கிறாள்
கடந்த மூன்று மாதங்களாக.
ஆறுமாதம் முன்புவரை
அவளிடம்
அப்படி ஒரு தடயம் இருந்ததேயில்லை.
அவளிடம்
அப்படி ஒரு தடயம் இருந்ததேயில்லை.
பிள்ளைகளோடு விளையாடச் சென்ற பையனை
அறிவற்ற முண்டமே
நீயுமா என் கழுத்தை அறுக்கிற,
பள்ளிக்கு சீக்கிரம் கிளம்பக்கூடாதா?
எனும் வார்த்தைகள் வெளிப்படும்போது
வீட்டின் மூலையில்தான் படுத்திருக்கின்றான்
இருபத்து நாலுவயது கணவன்.
அறிவற்ற முண்டமே
நீயுமா என் கழுத்தை அறுக்கிற,
பள்ளிக்கு சீக்கிரம் கிளம்பக்கூடாதா?
எனும் வார்த்தைகள் வெளிப்படும்போது
வீட்டின் மூலையில்தான் படுத்திருக்கின்றான்
இருபத்து நாலுவயது கணவன்.
இன்னும் தெளியவில்லை,
அடிக்கடி அவன் மூர்க்கத்தைக்கண்ட
சுற்றத்தார் கடவுள் பொய்
என பலநாள் சாட்சியானார்கள்,
அவர்களேதான் ஆறுமாதம் முன்பு
அவன் கிணற்றில் தவறிவிழுந்து
இல்லாமல் ஆனபோது கடவுளை நம்பினார்கள்.
அடிக்கடி அவன் மூர்க்கத்தைக்கண்ட
சுற்றத்தார் கடவுள் பொய்
என பலநாள் சாட்சியானார்கள்,
அவர்களேதான் ஆறுமாதம் முன்பு
அவன் கிணற்றில் தவறிவிழுந்து
இல்லாமல் ஆனபோது கடவுளை நம்பினார்கள்.
இப்போதெல்லாம் அவள் பிள்ளையைக்
குளிப்பாட்டும்போது மிருதுவாக தேய்த்து விடுகின்றாள்
அழுக்கற்று உளர்ந்தும், உளராமலும்
உதிரியான தன் மயிரை முன்னுக்கு இழுத்து
நுகர்ந்து பார்க்கிறாள்
இதழ்கள் மௌனமாகச் சிரித்துக்கொள்கிறது
சேலையின் முந்தியை மடித்து
அவ்வளவு நேர்த்தியாக பின் குத்தியிருக்கின்றாள்
தன் கைபேசியில்
பேசுகின்றபோது ஸ்கிரினுக்கு மிக நெருக்கமாக
இதழ்கள் குவிந்து செல்வது
ஆறுமாதம் முன்புவரை அவளுக்கு நிகழாத ஒன்று.
குளிப்பாட்டும்போது மிருதுவாக தேய்த்து விடுகின்றாள்
அழுக்கற்று உளர்ந்தும், உளராமலும்
உதிரியான தன் மயிரை முன்னுக்கு இழுத்து
நுகர்ந்து பார்க்கிறாள்
இதழ்கள் மௌனமாகச் சிரித்துக்கொள்கிறது
சேலையின் முந்தியை மடித்து
அவ்வளவு நேர்த்தியாக பின் குத்தியிருக்கின்றாள்
தன் கைபேசியில்
பேசுகின்றபோது ஸ்கிரினுக்கு மிக நெருக்கமாக
இதழ்கள் குவிந்து செல்வது
ஆறுமாதம் முன்புவரை அவளுக்கு நிகழாத ஒன்று.
ஒரு மனித மனம்
எல்லா மனிதர்களையும்
நேசிக்கமுடியும் என்று இப்போதெல்லாம் அவள்
அணுகுமுறையைப் பார்த்து
ஊகிக்கமுடிகிறது.
எல்லா மனிதர்களையும்
நேசிக்கமுடியும் என்று இப்போதெல்லாம் அவள்
அணுகுமுறையைப் பார்த்து
ஊகிக்கமுடிகிறது.
மெல்ல மெல்ல
புதிதாக ஏதோ ஒன்றின் மீது உறுதி.
அதைத்தக்க வைத்துக்கொள்ள
ஆயித்தமாகிக்கொண்டிருக்கிறாள்
மீண்டுமாக ஒரு நம்பிக்கை
மீண்டுமாக ஒரு ஒத்தாசை
மீண்டுமாக ஒரு ஆலோசனை
மீண்டுமாக ஒரு பக்க பலம்
அவள், அவளுக்காகவே
தடையற்று பெற்றுக்கொள்ளட்டும்.
புதிதாக ஏதோ ஒன்றின் மீது உறுதி.
அதைத்தக்க வைத்துக்கொள்ள
ஆயித்தமாகிக்கொண்டிருக்கிறாள்
மீண்டுமாக ஒரு நம்பிக்கை
மீண்டுமாக ஒரு ஒத்தாசை
மீண்டுமாக ஒரு ஆலோசனை
மீண்டுமாக ஒரு பக்க பலம்
அவள், அவளுக்காகவே
தடையற்று பெற்றுக்கொள்ளட்டும்.
ஜேடி
No comments:
Post a Comment