Saturday, March 21, 2015

கவிதை,

எல்லாவற்றையும் வீதியில் எறிவது
மிக லகுவாய் இருக்கிறது.
பணமாய் இருக்கப்போவதில்லை
பணத்தைக்கட்டுக்கோப்பாக வைத்திருந்த
வங்கி முகவரி சுமந்த காகிதம்
வந்துவிழுகின்றது ஈனஸ்வரத்தில்
மூச்சு விடும் நகராட்சி ஊழியனின்
நடத்தாட்டி இயந்திரத்தின் முன்.
எல்லாவற்றையும் வீதியில் எறிவது
மிக லகுவாய் இருக்கிறது.
எத்தனை உயிர்களுக்கு,
சுற்றுக்கதவுகள் அடைத்த இருட்டறையின்
இளவம்பஞ்சு மெத்தையின் மேடையிலிருந்து
புத்தனாய் இல்லாமலே
புத்தனுக்கான சுடர்களை வாறி
வனாந்தரத்தில் திரியும் புறாக்களின்
முகங்களுக்குமூன் விசிரி இறைத்திருக்கின்றேன்
எல்லாவற்றையும் வீதியில் எறிவது
மிக லகுவாய் இருக்கிறது.
குடித்து மயங்கி சாலையோரத்தில்
கிடந்தவனை முழுங்கிய அனகோண்டாவிற்கு
சற்றும் இருக்கவில்லை வக்கிரம்.
அவசரமாய் கிளம்பும் மூத்திரத்தை
கிடைத்த இடத்தில் கடத்திவிட்டு நகர மனதில்லாமல்
முக்கி வரவழைத்து, மூத்திரத்தை
தோளுக்கு ஈடான தோழனின் வாய்க்குள்
திணிக்கிற வக்கிர தம்பியின் வீட்டில்
தொங்குகிறது அவனைக்காக்கும் குலதெய்வம்
எல்லாவற்றையும் வீதியில் எறிவது
மிக லகுவாய் இருக்கிறது.
ஜேடி

No comments: