பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் 1
அ. வெண்ணிலா
குறிப்பு- நான் படைப்புக்குள் இருந்து மட்டுமே, என் சிறற்றிவிற்கு எட்டிய விதத்தில், என் கருத்தை வைக்கிறேன். இதில் எந்த விதத்தில் உண்மையிருக்கிறது என்று அத்தொகுப்பை வாசித்தவர்கள் சாய்வுகோளை இறக்கிவைத்து வாதிடலாம். என் புரிதல் என்பது எனக்கு. மற்றவர்கள் நிறுவல் அவரவர் சார்ந்தது. நான் தொகுப்பின் முதல் ஐந்து கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளேன். முடிந்தால் இரண்டு மூன்று பகுதிகளாகப் பதிவிடுவேன்.
கதைகளின் யதார்த்தத்தை நடைமுறை சூழல்களுடன் தன்னுடைய கற்பனைத்திறனை குழைத்து கதையாக்கியிருக்கின்றார். ஆரம்பம் முதல் மிக மென்மையாகப் பயணிக்கும் கதைகள் ஒரு கட்டத்திற்குமேல் வேறொரு முகத்தைக் காட்டிவிடுவதற்கான உத்தியை மிக கைதேர்ந்த முறையில் கையாளுகின்றார்.. வழக்குச் சொற்களைக்கலந்த மொழி என்பது மிக நாகரீகமாக பேச்சு தொனி மாறாமல் கதைகளில் கையாளப்பட்டிருக்கிறது. பல இடங்களில் கதைப்போக்கில் அநாயசமாக நகைச்சுவையை நுழைத்து கதையின் பாத்திரத்துடன் ஒன்றிப்போகச் செய்ய ஆசிரியரால் முடிகிறது. (பெரியப்பா நடக்கும்போது முன்னாடிப் பக்கம் தூக்கிக்கிட்டு இருக்கும்.) கவித்துவமான வரிகளை கதைகளின் திருப்புமுனைக்கு பயன்படுத்திவிடுகிறார். இவைகள் எல்லாம், படைப்பாளருக்கு மிக நேர்த்தியாகக் கைகூடி வருகின்ற செயல்களாக நான் பார்க்கின்றேன். கைகூடி வருகின்ற காரியங்கள் யார் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அழிந்துவிடப் போவதில்லை. ஆக அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை.
கதைகளில் தவறவிட்ட விஷயங்களையே நான் பிரதானமாக எடுத்துக்கொள்கிறேன். இந்த புரிதல் என் மூளைக்குறைவினாலும் இருக்கலாம். ஆனால் எனக்கு உண்மை என்று படுகிறதை மட்டுமேக் குறிப்பிடுகின்றேன். சரி தவறவிட்ட பகுதிகளுக்கு வருவோம்.
ஆசிரியர் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது அப்பாத்திரங்களுக்கு ‘அவள்‘, ‘அவன்‘, அல்லது ‘அவர்‘ விகுதியைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். கதையாசிரியரின் தாயாக இருந்தாலும் சரி தந்தையாக இருந்தாலும் மிக நெறுக்கமான உறவுமுறைகளாக இருந்தாலும் சரி. கதை பாத்திரமாக எடுத்துக்கொண்ட பிறகு, அது ஒரு கதாபாத்திரம் அவ்வளவுதான். ஆசிரியர் அவர்களிடத்தில் எந்தக்கரிசனையும் காட்டக்கூடாது. அப்போதுதான் அப்பாத்திரத்தின் உண்மையான வடிவம் பிரிதிபளிக்கும். வாசகனுக்கும் கதைப்போக்கில் தடைகளற்று சீராக செல்லமுடியும். இத்தொகுப்பில் ஆசிரியர் பல கதைகளில் அம்மாவையும், அக்காவையும் நெறுங்தகிய உறவு முறைகளையும் பயன்படுத்தும்போது அக்றினை விகுதியை பயன்படுத்துவார். (ஆசிரியர் அப்பாத்திரத்தின் மீது வைத்துள்ள பாசத்தால் அப்படி குறிப்பிடுகிறார் என்பது எனக்குத்தெரியும்.). கதைப்போக்கில் அக்றினைகள் சார்ந்து வரிகளும், வர வாய்ப்பிருக்கிறது. அச்சமயம் பாத்திரமும், அக்றினை வரிகளும் சேர்ந்து வாசகனுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது.
மேலும் ஆசிரியருக்கும், பாத்திரத்திற்கும் தொடர்பற்றதுபோன்ற தோற்றம் கதைப்போக்கில் இருக்கவேண்டும். உதாரணமாக “பூனைக்கு அகப்படும் கிளிகள்’’ கதையில் “அம்மா ஓடியாந்து தட்டி எழுப்பிவிடும்” இந்த வாசகம் அம்மாவாக வரும் பாத்திரத்திற்கு ஆரிசியர் கொடுக்கும் வார்த்தைகளாகும். இங்கே வாசகனாகிய எனக்கு அவுங்க அம்மா போலிருக்கு அதான் அவ்வளவு உரிமையாக, செல்லமாகக் குறிப்பிடுகிறார்கள் என்கிற புரிதல் வெளிப்படையாகத்தெரிகிறது. அப்படிக் குறிப்பிடுவதால் ஒரு வேளை வாசகனுக்கு அப்பாத்திரத்திற்கான தன்மையின் உண்மை நிலையை குறிப்பிடத்தயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (திட்டவும், புகழ்வதற்கும்)
மேலும் அதே பாராவில் “காலையிலேயே மானம் நல்லா காயுதடி, கஞ்சிப்போட்டவுடனே பாவு புடிச்சிக்கும்“ இது ஒரு செயலைக்குறிக்கும் வாசகம் இப்படி பாத்திரத்திற்கும், செயலுக்கும் ஒத்தவிதமாக வார்த்தை முடிவுகள் வரும்போது குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக கதைகளின் கருபொருட்கள் மனதை நெறித்து, தெறித்து வந்து விழவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி நோக்கும்போது அககருத்தை ஒத்து வருவத்ற்கான சாத்தியம் குறைவாகவேத் தென்படுகிறது.. ஆசிரியர் அதிகமாக கற்பனைத்திறத்தை நம்பிப் பின்னப்பட்டதாகத்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஏனென்றால் நான் வாசித்தக் கதைகள் ஐந்தும் ஒரே பார்முலாவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கதையின் ஆரம்பமுதலே ஒரு செடியின் காலைத்துளிர்ப்பு போல மிகத்தூய்மையாக நேர்த்தியாக்க கொண்டு சென்று குழிக்குள் தள்ளிவிடுகின்ற விபரீதம் நடந்துவிடுகிறது.
உதாரணமாக “பூனைக்கு அகப்படும் கிளிகள்’’ கதையை சற்று விவாதிக்கலாம். //“அத்தையும், மாமாவும் எவ்ளோ கூச்சல் போட்டு நாங்க விளையாடினாலும், சண்டைப்போட்டாலும்… எங்க பொறுப்புதானேன்னு ரெண்டுபேரும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க.“//
//குட்டிப்சங்களா, இப்படி மூஞ்சியத் தூக்கி வச்சிக்கிட்டா அடுத்த வர்ஷம் மாமாங்க இங்க அனுப்ப மாட்டேன்னு சொல்லுவாங்க. ஒங்க வூட்டுக்குத்தானே போப் போறீங்க. போயிட்டு நல்லா படிச்சுட்டு அடுத்த கிளாசுப் பரிட்ச எழுதிட்டு, சிரிச்சுக்கிட்டு அடுத்த கலக்கா லீவுக்கு இங்க வரணும்.//
இந்த வாசகத்ததை ஒத்த வரிகள்தான் ஆரம்பத்தில் இருந்து மாமா பாத்திரத்தின் பண்பு என்கிற நிலையில் வருகிறது. எந்த இடத்திலுமே சூசகமான வார்த்தைகள் பிள்ளைகளிடம் மாமா உபயோகிப்பது இல்லை. ஆனால், கதையின் கடைசி கட்டத்தில்
//“கண்ணத்தொறக்க முடியாம வெயிட்டா இருந்துச்சு. கண்ணத்தொறந்து மூடலாமான்னு கண்ணத் தொடைக்க கைய தூக்கப்பார்த்தேன். கைய அசைக்க முடியல. பெருட்டத்தத் துக்கி வச்ச மாதிரி இருந்துச்சு. கால அசச்சுப் பார்த்தேன், கால் மேல கனமா என்னமோ இருந்துச்சு.//
//“யாரோ கிட்டப் படுத்துக்கினு கீறாங்க. அப்ப கையையும் காலையும்? வயிறு குபீர்னு இருந்திச்சு….. திடீர்னு நெஞ்சு பூரா வலி. நெஞ்சக் கவ்வி எடுத்துச்சு“ இவைகள் எல்லாம் ஒரு எட்டு வயசு பெண்ணுக்கான யதார்த்தமான வாசகங்களாக வாசகனுக்கு உணர்த்தவில்லை. ஆசிரியர் பிருந்தாவின் எட்டுவயசு பருவத்திற்கு மாறுவதற்கு சிறமம் எடுக்கவில்லை.
ஒரு பெண்ணுக்கு அறிமுகமில்லாதவன் காமத்தை வெறியுடன் அணுகுதல் என்பதற்கும், நன்கு அறிமுகத்துடனான பெண்களிடம் ஆண் சந்தர்ப்ப சூழ்நிலையால் காமத்தை அடைதலுக்கும் நிச்சயம் வேறுபாடுகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். குறைந்த பட்சம் மூர்க்கமாகக் கீறுவதற்கும், ஒரு விசாரிப்பின் தழுவலுக்குமான வித்தியாசமாவது இருக்கும். மாமா பாலியல் வன்மத்தில் ஈடுபடும் காட்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. முதல் பாராவில் மாமா ஈவு இறக்கமில்லாமல் தடால்னு எறி குழந்தை மீது படுத்துவிட்டது போன்றும், அதே தொடர் நிகழ்வாக வரும் வாசகங்களின் இரண்டாவது பாராவில் பக்கத்தில் படுத்து தடவுவதுபோலவும் சொல்வது வாசகனுக்க நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை. மாமா பாத்திரம் இரவில் அக்குழந்தையின் மீது பாலியல் தொந்தரவு செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிச்சயமாக ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் அவ்வளவு மூர்க்கத்தனமாக அனுகியிருக்க மாட்டார் அல்லது ஆண் பாத்திரம் நடந்து கொண்டதற்கு மிகையா ஆசிரியர் குறிப்பிடுகின்றார் என்பதை அக்கதையின் ஆரம்பத்தில் இருந்து மாமாவின் பாத்திரத்தை நோக்கும்போது அறியமுடிகிறது.
மேலும் அந்தப் பெண்ணை (பெண்களை) பச்சைக்கிளிக்கும் மாமாவை பூனைக்குமாக ஒப்பிடுகின்றார் (ஆண்களை) பாலியல் தொந்தரவுகள் எல்லாம் முடிந்துவிட்டு அத்தை எழுதும் கடித்ததில் பச்சைக்கிளி கிணற்றடியில் செத்துக்கிடப்பதாகக் குறிப்பிடுகின்றார். இந்த இடத்தில் மாமாவின் வக்கிரத்தை உணர்த்துவதாக எடுத்துக்கொண்டால் அது மிகமிகத்தவறு எனென்றால் பூனை என்பது கிளியையோ அல்லது எலியையோ சாப்பிடுவது என்பது எதார்த்தம்.
அதன் வயிற்றுப்பசிக்காக அதைச்சாப்பிட்டே ஆகவேண்டும். அப்படியிருக்க ஒரு பெண்ணை, ஆணால் பாலியல் செய்தல் என்பது எதார்த்தமாக நடப்பது என்பதை ஏற்றுக்கொண்டு குறிப்பிடுகின்றாரா? அல்லது அப்படித்தான் ஒப்புக்கொள்ளமுடியுமா? மேலும் பாலியல் நிகழ்வை பச்சைக்கிளிக்கு ஒப்பிடுவதால் வாசகனுக்கு ஒரு பெரிய அதிர்வை எற்படுத்தவில்லை.
அக்காவின் காதலன்…… தொடரும்
டேனியல்

No comments:
Post a Comment