‘காதலின் இசை’
( கிரேய்ஸர் சொனாட்டா) லியோ டால்ஸ்டாய் எழுதிய இந்நாவல் 'காதலின் இசை' என்ற பெயரில் பேராசிரியர் நா. தர்மராஜன் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார். (டால்ஸ்டாயின் எந்தப் படைப்புக்கும் இல்லாத அளவுக்கு வெகுஜன எதிர்வினைகளை இக்கதைத் தூண்டியுள்ளது. இக்கதையை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கையெழுத்துப் பிரதியாகவும், ஒரே ஒரு அச்சிட்ட பிரதியாகவும் வாசிக்கப்பட்டுள்ளது. விவாதிக்கப்பட்டுள்ளது. 1891 வரை இப்படைப்பு அச்சிட்டு வெளிவரவில்லை. டால்ஸ்டாயின் மனைவி முயற்சி செய்து சக்கரவர்த்தி மூன்றாம் அலெக்ஜாண்டரின் அனுமதிப் பெற்று அவர் படைப்புகளில் சேர்த்துள்ளார்.) (முன்னுரையில் பாரதி புக்கவுஸ், மதுரை.)
இலக்கியத்திற்கென்று; நிஜத்திற்கென்று பாசாங்குச் செய்யத்தெரியாது; ஆத்மார்த்தமாகப் படைப்புகளில் தன்னை இணைத்துக்கொள்ளும் நண்பரை, கோபுர வாசலில் நுழைந்து, குளத்திற்கு மேற்கில் சிறு மண்டபத்தின் பின்பக்கத்தில் சந்தித்தேன். புத்தகங்கள் வாசிக்காமல், வாசித்ததுபோல் பாவனைச் செய்கின்றானா என்ற ஆய்வு இல்லாமல் நண்பர் முதலில் அவர் வாசித்தப் புத்தகத்தை விவாதத்தில் வைத்தார். பிறகு, பேச்சு நகர்ந்தது. இடையில் இன்று ‘காதலின் இசை’ என்ற சிறுநாவலை வாசித்து முடித்தேன் அடடா என்ன ஒரு படைப்பு என்று மெச்சினார். நான் அதை உள்வாங்கிக்கொண்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் வாசித்ததை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். ஒருவேளை, நீ என்ன வாசித்தாய் என்று முதலிலேயே சோதிக்கவேண்டும் என்கிற விதமாக என்னிடம் கேள்வியை எழுப்பியிருந்தால், அவருக்கு உபயோகப்படும் படி நிச்சயமாக என்னிடத்திலிருந்து ஒன்றும் கிடைத்திருக்காது. ‘வாசிக்கிறவனா இல்லையா என்பது வாசித்தவன் சொல்லுவதைக் கவனிப்பதிலேயே தெரிந்து கொண்டிருப்பார் போல’ இப்பொழுது நான் வாசித்ததை, என்னை அறியாமலே விவாதத்திற்குள் இழுத்துவிட்டார். இது உண்மையிலேயே படைப்பாளனின் ஆழ்ந்த உத்தி என்றுதான் எனக்குப்படுகிறது. மேலும், விவாதிக்கும் இருவருமே எந்தப் புறசூழலையும் கணக்கில்
எடுத்துக்கொள்ளாமல் ஆத்மார்த்தமாகப் படைப்பைக்குறித்து படைப்பிற்குள் சென்றுவிட்டதால்
விவாதம் சிறப்பை எட்டியது என்றுதான் சொல்லவேண்டும்.
நான் வாசித்த ‘ஜே ஜே சில குறிப்புகளில்’ “இரு நண்பர்கள் பேசிக் கொள்கிறபோது, ஒருவர் நண்பரிடம் அடுத்து என்ன பேசவேண்டும் என்று நினைவுப்படுத்திக்கொள்கிற நிலமை வரவேக்கூடாது” என்று சொல்வார். உண்மையிலேயே அப்படி ஒரு நிலமை அந்தச் சந்திப்பின் விவாதத்தில் வந்ததேயில்லை. நாங்களாக அதிகநேரம் கடந்துவிட்டது என்று கிளம் பினோம். அப்பொழுதுதான் ‘காதலின் இசை’ புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். ‘லியோ டால்ஸ்டாய்’ புத்தகம் தறீங்களா? படித்துவிட்டு தருகிறேன் என்று கேட்டேன். “நூலகத்திற்கு திருப்பித்தர இன்னும் நாள் இருக்கிறது பொறுமையாகப் படித்துவிட்டுத்தாருங்கள்” என்றார்.
எந்தக் கிரகங்களிலும் தங்கிவிடாமல் சுழன்றடித்து, இப்பிரபஞ்சத்திலேயே கண்ணுக்குப் புலப்படாமல் தங்கியிருப்பதுப் படைப்பாளியின் சிந்தனைதான். உண்மையானப் படைப்பாளிகள் தீர்க்கதரிசியின் இன்னொரு பிம்பமாயும், வாழும்போதே மனிதனைக் காப்பவனாய், வாழாமல் வாழும்போது அம்மனிதனை ஒழுங்குபடுத்துபவனாய் இருக்கிறான். நிச்சயமாக லியோ டால்ஸ்டாய் அப்படிப்பட்டவர்தான்.( கிரேய்ஸர் சொனாட்டா ஜெர்மானிய இசைமேதையான மீத்தோவன், பிரெஞ்சு இசைவாணர் ராதோல்ஃப் கிரேய்ஸருக்கு (1766-1831ல் ) அர்ப்பணித்த பிரபலமான சங்கீதப் படைப்பு) என்று குறிப்பிடப்படுகிறது.
ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்த இசைப்படைப்பின் பெயரைத் தலைப்பாக வைத்துள்ளார்கள். அட்டைப்படத்தில் ஒரு கொடூரமானக் கொலை நிகழ்வைப் போட்டிருக்கிறார்கள். இதிலேயே இந்நாவலின் முழு அர்த்தங்கள் புதைந்து கிடக்கிறது.
நாவல் தொடர் வண்டியில் பயணிக்கும், பயணிகளின் விவாதத்தில் தொடங்குகிறது. ஒரு பெட்டியில் கணவன் மனைவி இன்னும் நான்குபேர் உட்கார்ந்துச் செல்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஒருவருக்குள் ஒருவர் வாக்குவாதம் நடந்துகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் எதிரில் உள்ளபெரியவர் ஆலோசனைச் சொல்லும் விதமாகக் குறுக்கிடுகின்றார். அதை ஒட்டி மற்ற நபர்களும் வாக்குவாதத்தில் நுழைகிறார்கள். வயதானவர் “முன்பெல்லாம் மனைவிகள் கணவனிடம் இப்படியெல்லாம் வாதம் செய்யமாட்டார்கள். ஆனால், இப்பொழுதுப் பெண்கள் கல்விக் கற்றுவிடுவதால் இந்த வாதங்கள் சாதாரணமாக நடக்கிறது” என்று சொல்லுகிறார்.
பெண், கல்விக் கற்பதற்கும் இந்த வாதத்திற்கும் என்ன சம்பந்தம், “பெண்கள் கல்விக் கற்பதே தவறானதா? பழைய காலத்தில் மணமகளும், மணமகணும் திருமணத்திற்கு முன்பு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலேயே கல்யாணம் செய்துகொண்டார்கள். அது நல்லதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று வாதிடுகிறாள். மேலும் எதிர்த்திசையில் உள்ள ஆண்களில் ஒருவர், "பெண்கள், ஆண்களை மதிப்பதில்லை. கணவனுக்கே பயப்படுவதில்லை,” என்று குறறம் சாட்டுகிறார்.
அதற்கு அவள் “எல்லாச் சுதந்தரங்களையும் உங்களுக்கே வைத்துக் கொண்டு பெண்களை அடக்கி வைத்திருக்க விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பம்போல எதைவேண்டுமானாலும் செய்யவதற்கு உங்களுக்கு உரிமைக் கொடுத்துக் கொள்கிறீர்கள்.” இப்படியாக வாதத்தின் போக்கு வாழ்வியலுக்கான தத்துவங்களை உள்ளடக்கிக்கொண்டு நகர்கிறது. பெண்ணின் கணவன் வழக்குரைஞர். வாக்குவாதம் வலுவடைந்து ஒரு கட்டத்தில் உன்னோடு வாழமுடியாது என்று மாறிமாறி சொல்லிக்கொள்கிற சந்தர்ப்பம் வருகிறது. குடும்ப வாழ்வில் கணவன் மனைவி ஒருவரில் ஒருவர் காதல் கொண்டுதான் வாழ்கிறார்களா? அப்படி வாழவில்லை என்றால் அதற்கு காரணம் யார்? என்று ஒருவர் விவாதம் எழுப்புகிறார். இடையில் பெரியவ்ர் மீண்டும் ‘பெண்கள் சரியில்லை.மனைவி கணவனுக்கு துரோகம் செய்கிறாள். அப்படி செய்தால் என்ன தீர்வு’ என்கிறார்.
வழக்குரைஞர் மனைவி, “பெண்களை நல்ல விதமாக நடத்தினால் நிச்சயமாக காதல் இருக்கும துரோகம் செய்யமாட்டாள். திருமணத்தில் காதல் இல்லையென்றால் அது திருமணமேயல்ல. காதல்தான் திருமணத்தைப் புனிதப்படுத்துகிறது” என்கிறாள். இதற்கிடையில் சற்று முன் ஸ்டேஷனில் ஏறிய ஒரு கனவான் விவாதத்தை உன்னிப்பாகக் கவனித்துவந்தார். திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு “காதல் என்பது என்ன? எந்த காதல் புனிதமானது? திருமணத்தைப் புனிதப்படுத்துகின்ற காதல் என்பது என்ன? கேள்வியை எழுப்புகிறார். பயனிகள் உட்பட சற்று அதிர்ச்சியுற்றுப் பார்க்கிறார்கள். வழக்குரைஞர் மனைவி “காதல் என்பது மற்ற எல்லாரைக்காட்டிலும், ஒரு குறிப்பிட்ட ஆணையோ அல்லதுப் பெண்ணையோ அதிகமாக விரும்புவதைக் குறிக்கும்” என்கிறாள். அப்படிப்பட்டக் காதல் எவ்வளவு காலத்துக்கு இருக்கும்? ஒருமாதமா? இரண்டு நாட்களா? அரைமணிநேரமா? என்று மீண்டும் கேள்வியை எழுப்புகிறார். அக்கேள்விக்கு அவளால் சரியானப் பதில் சொல்ல முடியவில்லை. அவள் கணவன் வழக்குரைஞர் பதில் சொல்லுகிறார், கனவானுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் அவளே “அதாவது, எவ்வளவு காலத்துக்கென்றால், மிக நீண்ட காலத்துக்கு சில சமயம் வாழ்க்கை முழுவதற்குமே” என்று பதில் சொல்லுகிறாள்.
கனவான் “அப்படி நடப்பது நிஜவாழ்வில் அல்ல. நாவல்களில்தான் அப்படி நடக்கச் சாத்தியமுண்டு” இப்பொழுது எதிர்திசையில் இருக்கும் கிழவர், வழக்குரைஞர் உள்பட ‘கனவானே உங்கள் வாதத்தில் மட்டுமே முற்றிலும் உண்மை இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது’என்று மறுப்பு கூறுகிறார்கள். மறுப்பது உங்கள் உரிமை என்பதுபோல் “திருமணங்கள் எல்லாக் காலத்திலும் இருக்கின்றன. பெரும்பாலும் கடவுளின் தண்டனைக் காத்திருக்கிறது என்று பெரும்பாலானோர் நம்புவதின் மூலமாகத் தங்கள் வாழ்க்கையில் தங்களின் விருப்பங்களுக்கு மாறாகப் புனிதமாக வாழ்வதைப்போல் மோசடி செய்துக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் கணவனும் மனைவியும்; ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு பலாத்கார வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அதன்மூலம், சீக்கிரத்தில் மனக்கசப்பு உண்டாகிச் சண்டையிட்டுக்கொண்டும், புறங்கூறிக்கொண்டும் நாளுக்கு நாள் பிரச்சனை வளர்ந்துகொண்டுபோகிறது. இப்படிப்போனதின் பலனாகத்தான் என் மனைவியை நான் குத்திக்கொன்றுவிட்டேன்.” என்று உணர்வுப் பொங்கச் சொல்லும்போது எதிர்த்திசையில் இருப்பவர்கள் கேட்டு அதிர்ச்சியுறு கிறார்கள். அடுத்த, ஸ்டேஷன் வந்தபோது சிலர் இறங்குவது போலவும்; சற்று அடுத்தப்பெட்டிக்கு நடப்பதுபோலவும்; எல்லோரும் நழுவி விடுகிறார்கள். ஒருவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். (அவரையே கதையாசிரியராகவும் எடுத்துக்கொள்ளலாம்) கனவான் தன் மனைவியைக் கொல்லும் படியானச் சந்தர்ப்பம் எப்படி வந்தது. இந்த வாழ்வில் ஒருவரை ஒருவர் (ஆண் பெண்) சார்ந்து வாழ்கிற குடும்ப உறவு ஏன் பெரும்பாலும் நீடித்து நில்லாமல் போகிறது.’ அதற்குப் பொறுப்பாளி யார்? சமூகத்தால் அதற்குத் தீர்வுக்கிடைக்கிறதா? பிரச்சனை எவ்விதம் வருகிறது என்ற காரணத்தைச் சொல்லுகிறார். தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது என்கிற விவாதத்தையும் வைத்து, கனவான் தன் கடந்த கால வாழ்வை அந்த நபரிடம் சொல்லிச்செல்கிறார். இது ஏதோ ஒருவர் சார்ந்த வாழ்முறையல்ல. நாடுகடந்து, மொழிகடந்து பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பொருந்தும் விதத்தில் வாழ்வின் விவாதத்தை வைத்துள்ளார்.
காதலை ‘லியோ’ இப்படியாக அறிமுகப்படுத்துகின்றார். 1“ஒரு அழகானப் பெண்ணைப் பார்க்கும்போது நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படுகிறது இதைதான் நீங்கள் காதல் என்று சொல்லுகிறீர்கள்” மேலும், 2“கவித்துவம் நிறைந்த காதல் என்று சொல்கிறீர்களே; அது அறப்பண்புகளால் ஏற்படுவதில்லை. உடல் உரசுவதால், முடியலங்காரத்தால், உடையின் வர்ணஜாலங்களால் அதன் வடிவமைப்பால் ஏற்படுகின்றது, என்பது பெண்களுக்கே நன்றாகத்தெரியும்” 3“காதல் இலச்சியப் பூர்வமானதும் மேன்மையானது என்று கருதப்படுகிறது. ஆனால், அது உண்மையில் மிகக்கீழ்த்தரமானதாகவும் பன்றிகளுடைய குணம் சார்ந்ததாகவும் இருக்கிறது” என்கிறார். ஒரு நபர் காதலியைப் பிடித்து விட்டால் அந்தக் காதலியிடம் எப்படி கண்மூடித்தனமாக நடந்துகொள்கிறான் என்பதையும் கூறுகிறார். 4“ஒரு அழகானப் பெண் அபத்தங்களைப் பேசலாம், நீங்கள் அதைக்கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவள் பேசுவது அபத்தங்கள் அல்ல. அறிவார்ந்த விஷயங்களைப் பேசுகிறாள், செய்கிறாள், அவற்றில் ஏதோ அழகு இருப்பதாக நினைக்கிறீர்கள்.” என்கிறார். உண்மையில் பல ஆண்கள் அப்படிப் புரிந்துகொள்வதால்தான் பெற்றோர்கள் பிச்சை எடுக்கவும், பாதுகாப்பு இல்லங்களை தேடியும் செல்கிறார்கள்போல.
பெண்களை இச்சமூகம் எப்படி வைத்திருக்கிறது என்பதையும் பல இடங்களில் வாதிக்கிறார். 1“ ஒரு பெண் அவளுடைய இயல்புக்கு மாறான வகையில் ஒரே சமயத்தில் கர்பவதியாகவும், குழந்தை வளர்க்கும் தாயாகவும், தன் கணவனுக்கு மனைவியாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் இதன் பொருள்” இந்த நிலமையை அனுபவிக்கிறப் பெண்கள் பலர் பலவித நெருக்கடிகளுக்கு ஆளாகித் தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படுத்தியும் விடுகிறார்கள். 2“ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சம உரிமைகளைக்தர மறுத்து அவர்களை அவமதித்ததற்காக, ஆண்களுடைய சிற்றின்ப உணர்ச்சிகளை முடிக்கிவிட்டு பொறியில் சிக்க வைத்து அவர்கள் பழிவாங்குகிறார்கள்.” 3“ பெண்கள் தங்கள் கணவன் மார்களிடமிருந்து கீழ்மையானக் குணங்களைக்கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஆண்களின் தூய்மையை நம்புவதாக நடிக்கிறார்கள்.” 4“ஒயினும், பெண்களும், கவிதைகளும் என்று ஜெர்மன் கவிஞர்கள் பெண்ணைப்பற்றிக் கவிதைப் பாடியுள்ளார். மூன்றுமே போதைத்தரக்கூடிய போகப்பொருளாகவே கவிதைகளில் உருவகம் செய்திருக்கிறார்” இப்படித்தான் நாவல் முழுதும் இயங்குகிறது. வாழ்வியலில் அனைத்துத் தரப்பினருக்குமான இரகசியங்களை அவிழ்த்துக் கொண்டேபோகிறது.
டால்ஸ்டாய் இன்னொரு உண்மையையும் வைக்கிறார்.1“குழந்தைகள் என்றால் பேரானந்தம், கடவுளின் அருட்கொடைகள் என்கிறார்கள். அது எல்லாம் பொய் குழந்தைகள் துன்பம் என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஏதோ ஒருசமயத்தில் தாய்கள் அதை வெளிப்படுத்தியும் விடுகிறார்கள்.” சற்று ஆழ்ந்து யோசித்தால் இது உண்மைதான் என்பது விளங்கும். பாத்ரூமில், தானாகக் கால் அலம்பிக்கொள்ள கற்றுக்கொண்டால்; அதன்பிறகு கடமைக் குதான் பெற்றோர், பிள்ளை உறவு. தலைக்கு எண்ணைத் தேய்க்கும் அம்மாவின் கைகளில் இருந்து சீப்பைப் பிடிங்கிக்கொள்கிறான். 'அம்மா என்று சொல்லத் தயங்கி, குடு நானே வாரிக்கொள்கிறேன்' என்கிறான். தினந்தோறும பள்ளி வாசலுக்கு மதிய உணவுக் கொண்டுவந்தாலும், என்றாவது ஒருநாள் ஆசிரியரைப் பார்க்கிறேன் என்றதற்காக “நாளையிலிருந்து நீ வரவேண்டாம்” என்று முரைக்கிறான். ஆணானாலும் ,பெண்னாலும் திருமணத்திற்குப் பிறகு அவசர தேவைக்கு அடகுவைத்து தற்காலிகத் தேவையைப் பூர்த்திசெய்ய உதவும் பொன் நகைதான். சிலநேரம் (சிலது) நம்மிடம் திரும்பி வராமலே முழ்கிவிடும், (சிலது) அதிகமாக நஷ்டப்படுத்திய பிறகு கைக்கு வரும், அதன் பிறகாவது எப்போதும் நம்முடன் இருக்குமா சந்தேகம்தான். இப்போது சொல்லுங்கள் ‘லியோ’ சொல்வது சரிதானே?. (நூறில் ஒன்று தங்கமாய் இருக்கும் அது விதி விளக்கு).
இந்நாவல் ஆண் சார்பாக மட்டுமே நின்றுப் பேசவில்லை. பெண்களுக்கு இழைக்கப்படும் சமன்பாடற்றக் குளறுபடிகளைச் சுடடிக்காட்டுகிறார். அதே சமயம் பெண்கள் லேசுபட்டவர்கள் அல்ல எண்பதையும் சுட்டுகிறார். 1“ஒரு பெண் ஒரு ஆணை மயக்கிவிட்டால் மகிழ்ச்சி அடைகிறாள், தன்னுடைய மிக உயர்ந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறாள். அது கடந்த காலத்தில் அப்படித்தான் இருந்தது. எதிர்காலத்திலும் அப்படித்தான் இருக்கும். இது திருமணமாகாத பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும் பொருந்தக்கூடியது.” என்று பெண்கள் குணம் சார்ந்து சொல்லுகிறார்.
கனவான் வாலிபவயதில் பல பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிறான். (அதற்கானச் சூழலை இந்தச் சமூகம்தான் அவனுக்கு கட்டமைத்துத் தருகிறது. மனம் போனபடியானக் கேளிக்கைகள், ஆடம்பரமானக் கொண்டாட்டங்கள் ஒருவரைத் தாழ்த்தி ஒழுக்கக்கேடன் என்றும். ஒருவர் தவறுசெய்தாலும் உயர்த்தி வசீகரிப்பவள், வசீகரிப்பவன் என்றும் கட்டமைத்து வைப்பதில்தான் இப்படியானச் சம்பவங்கள் நடக்கிறது. மனிதனின் உள்ளத்தில் நீதியின் குரல் ஒலித்துக்கொண்டே இராதபட்சத்தில் இப்படியான செயல் வெளிப்பட் டேத்தீரும்.) ஆனால், தனக்கு மனைவியாய் வருபவளிடத்தில் இனிமேல் உண்மையாய் இருக்கவேண்டும் என்பதைக் கடமையாகக்கொண்டு வாழ்க்கைத் தொடங்குகிறான். அவன் எதிர்பார்த்துபோல் இனிமையானதாக இல்லை. ஆண் பெண் உறவில் எத்தகையதான முரண்பாடுகள் எழுகின்றது. அந்த முரண்பாடுகள் ஏற்படுவதற்கு தான்சார்ந்த செயல்பாடுகளில் அன்பற்று, ஒழுங்கின்மையுடன் செயல்படுதலே என்பதை வைக்கிறார். முப்பிரி கயிறு அன்புகலந்து இறுகுகிறபோது, நூல் உறுதிபடும் அதுவே அரக்கத்தனம் சேர்ந்து மேலும், மேலும் சற்று இறுகுகிறபோது எத்தகையதான வலுவுள்ள கயிறானாலும் அறுவதைத்தவிர வேறு வழியில்லை. இப்பொழுது கனவானுக்கும், மனைவிக்கும் இடைவெளி தொடரும்போது கனவானின் பால்யகால சினேகிதன் நுழைகிறான். கனவான் குடும்பத்தில் பிரச்சனை கூடுகிறது. சூழல் மேலும், ஒருவரில் ஒருவர் அன்பற்றதாக மாறிக்கொண்டே செல்கிறது. ‘வருடங்கள் கடந்து வாழ்கிற மரத்தை, இயந்திரமான ஜேசிபி தனது இடதுகையால் ஐந்து நிமிடத்தில் லேசாகத்தள்ளி சாய்துவிடுவதுபோல’ கனவான் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்கிறான். சிறிதுநாள் கழித்துக் கனவான் விடுதலை பெற்றுவிட்டான். கொலையுண்ட பெண்ணை எந்தச் சூழலிலும் வேசியாகவோ கீழ்மையான செயல்பாடு நிறைந்தவளாகவோ ‘லியோ’ காட்டமாட்டார். கனவானுக்கும் விடுதலைக் கொடுப்பதின் மூலமாக அவனும் ஒரு கொடூரமானவன் இல்லை என்பதை வைப்பார். வாழ்வியலில் இத்தனைச் சிக்கள்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால், மனிதன் எத்தகைய செயல்களை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார். இதற்கு ஆண் பெண் ஒவோருவரும்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்
நாவலின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. வாசிக்க எந்தத் தடையையும் ஏற்படுத்தாவண்ணம் மிக அற்புதமாக இருக்கிறது. ‘காதலின் இசை’ ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய முக்கியப் படைப்பு.
எமி

No comments:
Post a Comment