Friday, November 27, 2015

சிறுகதை,

           

   நன்றி ‘காற்றுவெளி‘  Mullai Amuthan


    

         ‘தலைமுறை மரணங்கள்‘                                                             ‘சிறுகதை‘

குடும்பதின் முதல் தலைமுறையிலிருந்துஅவன் மரணங்களை ஆய்வு செய்துக்கொண்டிருந்தான். ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் நிகழ்ந்தஎட்டு மரணங்கள்வரிசையாகக் குறித்துக்கொண்டான். தலைமைதுணைத்தலைமை இருவகையில் பிரித்துக்கொள்ளும்படி மரணங்கள்நிகழ்ந்திருந்தது. சாதாரண வெள்ளைத்தாளுக்கு இரு பக்கங்களுக்கான தேவை இருக்கத்தான் செய்கிறது. குறிப்புத் தொடரகடந்த காலங்களில்நிகழ்ந்த மரணங்களின் உருவங்களை யோசித்தபோதுஅவரவர்களின் கடைசி நிமிடங்கள்தான் முன்னால் நின்றது. அந்நிமிடம் குழந்தையின் சுயப்புத்தியைக்கொண்டிருந்தது. மரணிப்பவர்களின் கடைசி நிமிடங்களில்அவர்களுக்கு எதிரியான மனிதர்களை முன்னால் நிறுத்தினால்,முடிவுவேறாக இருக்கலாம் என ஊகித்தான். மரணம் யார் கண்ணிலும் அகப்படுவதில்லை. அதன் கடந்த காலம் மிக நீண்டதாக இருந்தது.

குடும்பத்தின் முதல் தலைமுறையில் இருவர். ஒருதாய்ப் பிள்ளைகள். மூத்தவர் டேவிட்டுக்கு நான்கு பிள்ளைகள். இளையவர் தங்கராஜிக்குநான்கு பிள்ளைகள். இருவருக்கும் தலா இரண்டு ஆண்இரண்டு பெண் இருந்தார்கள். சில குழந்தைகள் பிறந்துஇறந்தும்இறந்துபிறந்தும்இருந்தது. அவைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. ஆய்விற்குத் தேவைப்படவில்லை. வாழ்வோர் மட்டும்ந்தான் தேவைப்பட்டார்கள்.

டேவிட் பிள்ளைகளில் தன்ராஜ் மூத்தவன்தாமஸ் இளையவன். இருவருக்கும் நிறத்திலோஅழகிலோ அல்ல. எண்ணிக்கையில். பிள்ளைகள்ஒண்ணுபோலவே அமைந்திருந்தது. தாமஸ் அண்ணனோடுமுரண்பட்டவன். சில விசயங்களை வேண்டுமென்றே விதண்டாவாதமாகச்செய்தான். அண்ணனுக்கு மூன்று பிள்ளைகள். தாமசுக்கு நான்காக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதம். கூடுதலாக ஆண் பிள்ளைப் பிறந்தது.அக்குழந்தை மற்றெல்லாக் குழந்தையைவிடக் குண்டாக,சந்ததியில் இல்லாத திடகாத்திரமாக இருந்தது. தாமஸ், ‘நான் என் அண்ணனைஜெயித்தேன். அவனும்நானும் சமமல்ல‘ என்பதாகஉள்ளுக்குள் பெருமையாக இருந்தான்.

தாமஸ்அவன் மனைவி இருவரும் நல்ல நிறம் என்பதால்அவர்கள் குழந்தைகளும் கோதுமை நிறத்தில் இருந்தார்கள். நான்காவது குழந்தைதாமஸின் மாமனாரைப்போலக் கறுப்பாக இருந்தான். படர்ந்த முகம்படர்ந்த உடல். நாளுக்கு நாள் குழந்தைப்பருத்துவேகமாக வளர்ந்து.தத்தித்தத்தி நடக்கத்தொடங்கியது. ஒரு நாள் மாலைதாய்வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தாள். குழந்தைபூனையின் நழுவலாகவெளியேச்சென்றது. வாசல் அருகில் சிறிய தண்ணீர்த் தொட்டியில் கவிழ்ந்தது. சில நிமடங்களில் மிதந்துவிட்டது. பல ஆண்டுகள் கழிந்தாலும்தாமசுக்கு மீண்டும் குழந்தை இல்லை. ஏதோ ஒழுங்கு முறையாக அண்ணன்தம்பிக்குத் தலா ஒர் ஆண்இரண்டு பெண்கள்தான் நிலைத்தார்கள்.முதலாவதுஇரண்டாவது தலைமுறையில்எண்ணிக்கைபாலினம் வகையில் ஒரே அளவில் அமைந்திருந்தது,தற்செயலானதாமரபுசார்ந்ததாக இருக்கமாஅவன் வெள்ளைத்தாளில் ஒரு முடிவானத் தீர்வை எழுத முடியவில்லை.

முதல் தலைமுறை அண்ணன் டேவிட் தன் குடும்பத்தைமிகப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டார். சிறு பொருளுக்குக்கூடக் கிராமத்தின்நாட்டார்க் கடைக்குப் போகும்படியாக வைக்கவில்லை. அரசுப் பள்ளியில் இரவு காவலர்ப்பணியில் இருந்தார். எல்லாப் பொருளையும் நகரத்தின்மொத்த வியாபாரம் கடைகளில்தான் வாங்குவார். ஒன்றிரண்டு தேவைப்படும் பொருள்களை மாலைவேளையில் வாங்கி வருவார். கிராமத்தில்அரசுப் பணிசெய்த ஒன்றிரண்டு பேரில்அவரும் ஒருவர். கிராம பெண்கள் அவர் குடும்பம் நடத்தும் முறைமையைப் பெருமையாக நடவுகளிலும்,களையெடுக்கும் இடங்களிலும் பேசிக்கொண்டார்கள். அந்நாட்களில் கிராமங்களில் ரசம் கொடுத்துகருவாட்டுக் குழம்புசாம்பார்க் கொடுத்து,மாட்டுக்கறிக் குழம்பு மாற்றாக வாங்குவதும். சிலர்குழம்பு வைக்க முடியாத நிலையில் வெறுமனே கொஞ்சம்கொழம்பு தாம்மா“ அடிக்கடிவீடுகள் மாறி மாறி கேட்டுக்கொள்கிற வழக்கம் இருந்தது.

டேவிட் வீட்டுக்கு யாரும் குழம்புக் கேட்டு வரமாட்டார்கள். ஏதாவதொருநாள் தப்பித்தவறி வந்துவிட்டால்டேவிட் மனைவியிடம்அவமானப்படவேண்டும். டேவிட்டோஅவர் பிள்ளைகளோ பாவம் குடுத்தனுப்புமா‘ என்ற வார்த்தைகளைச் சொல்ல மாட்டார்கள். டேவிட் பலநேரங்களில் கண்டுகொள்ளமாட்டார். எப்போதாவது அத்திப்பூத்தார்போலச் சொல்லுவார், “தேகொஞ்சம் குடுத்தனுப்புடி“ என்பதோடு சரி.பெரும்பாலும் பெண்கள்தான் குழம்புக் கேட்க வருவார்கள். டேவிட் வருபவர்களுக்கு ஆதரவாகச் சொன்னால்மனைவி ஏன்அவுளுங்க எதுனாகாட்னாளுங்களா?. எங்க மாமா. எங்க மாமானு வராளுங்களே“ வருபவர்கள் காதில் விழும்படியே சொல்லி விடுவாள். அதற்காகவே யார்வந்தாலும்டேவிட் கண்டுகொள்ள மாட்டார். பிள்ளகளுக்கு அந்தப் பிரச்சனை இல்லாதபோதும்,கிராமத்தார் யாரிடத்திலும் அவர்களுக்குத்தொடர்பு இருந்திருக்கவில்லை. டேவிட் வெளி ஊர் அரசுப்பள்ளி ஒன்றில் தங்கியிருந்த போதுஅவ்வளாகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.பிள்ளைகள் திருமண வயதை நெருங்கியபோதுதான்டேவிட் சொந்த கிராமத்திற்குக் குடிபெயர்ந்திருந்தார்.

முதல் தலைமுறை அண்ணனுக்கு நேர்மறையாகதம்பி இருந்தார். தங்கராஜ் மனைவி காலையும்மாலையும் நாட்டார்க் கடைக்கு நடந்தாள். தன்ஓரகத்திபோல்,வீட்டில் இருப்பதில்லை. கூலி வேலைகளுக்குச் சென்றாள். பல நாட்கள் நாட்டார்க் கடைக்காரனிடம்அவமானப்படவேண்டியிருந்தது. தன் ஓரகத்திக்கு அந்நிலை இல்லைஅவள் கொடுத்து வைத்தவள். நினைத் திருக்கக்கூடும். தங்கராஜிடம் நொந்துக்கொண்டதில்லை. தங்கராஜ்பல நாட்கள் திடீரென யாரையாவது இரவு நேரங்களில் சாப்பாட்டுக்கு அழைத்து விடுவதுண்டு. வெறும்மிளகாய்புளி,பூண்டை,அம்மியில் அறைப்பதுதான் தெரியும். அதன் மணம்எச்சில் ஊர வைக்கும். பல இரவுகள்திடீரென வருவோருக்கும்பிள்ளைகளுக்கும்சாப்பாட்டுக் குண்டான் காலியாவதுண்டு. அநேக முறை வடித்த தண்ணீரில் தங்கராஜ்மனைவியின் பசித்தீர்ந்திருக்கிறது.

தங்கராஜ் அநேகமுறை வீட்டில் கிடைக்கும்பித்தளைப் பாத்திரம்பக்கட்டை அடகுவைத்துப் பொதுக்காரியங்களில் செலவிட்டிருக்கிறார். முதல்தலைமுறையின் முதல் மரணம் தங்கராஜ் மனைவியாக இடம்பிடித்தாள். மரித்திருக்கவேண்டிய வயது இல்லை. சாந்தம்‘, தன்னால் இயன்றஉதவிகளை வாழ்க்கை முழுதும் செய்திருக்கிறாள். இன்னும் நடமாடவேண்டிய காலங்கள் இன்னும் கூடுதலாக இருந்தது. தங்கராஜ்,குடும்பச்சூழலில் கஷ்டம் இருந்தது. திசை மாறிவிடுதல் இருக்கவில்லை. பொதுவெளிக்குச் செய்யும் நன்மையைக் குறைவாகப் பேசினார்கள்.தங்கராஜிக்குச் சிறுப்பிரச்சனை வந்தாலும்மனைவியின் மரணத்தைச் சம்பரதாயங்களுடன் இணைத்துப் பேசிக்கொண்டார்கள்.

பதினைந்து வருஷம் இடைவெளியில் முதல் தலைமுறையில் அண்ணன் டேவிட் இறந்தார். கல்லறை அடக்கம் முடிந்த வாரத்தில்தன்ராஜ்ஊராரிடம் பஞ்சாயத்து வைத்தான். வழக்கப்படி குடியிருப்பு மனையில் மூத்தவனுக்குத்தான் மேல்பகுதியில் வரவேண்டும். அவனைமேல்வீட்டில் இருந்து வெளியேறிகீழ்பகுதிக்குப் போகச்சொல்லுங்கள்.

இளயவன் தாமஸ், “இந்த ஊர்ல எவன். என் வீட்டாண்ட வறான் பார்க்கிறேன். எங்க பெரிப்பன் கெவர்மெண்ட்டு வேலையை ஏமாத்திவாங்கிக்கினானே. இப்ப வீடு பாகத்துக்கு வரானாஎவன் பஞ்சாயத்துக்கு வரானோஅவனைத்தான் முதலில் வெட்டுவேன்

அவன் செய்தாலும்செய்வான் அண்ணன்தம்பி வழக்கு. நாம ஏன் வீனாகத் தலையிடனும். கிராமத்தார் ஒதுங்கிக்கொண்டார்கள். தகப்பனுக்குரியவருவாய்களைத் தாமஸ் அனுபவித்தான். தன்ராஜ்தாமஸ் கடைசிவரை ஒன்றுபடவேயில்லை. தன்ராஜிக்கு ஓரளவு வருவாய் இருந்தது.இருந்தாலும் மேல் வரவை எதிர்ப்பார்த்தார். தன் பிள்ளைகள் நலன் முக்கியமாகக் கருதினார். தகப்பனார்ச் சொத்தை ஒருத்தன் மட்டும் ஆளும்படிஏன் விடவேண்டும்கிடைக்கச் சாத்தியம் உள்ள எந்த உபாயத்தையும் இழந்துவிடாக்கூதாது என்பதில் தன்ராஜ் குடும்பம் உறுதியாக இருந்தது.தாமஸ்நான் அரசு வேலைச் செய்யவில்லை. என் அப்பனின் வருவாய் பெரிய தொகையில்லை. என் குடும்பதிற்கு அதுமட்டுந்தான் ஆதாரம்என்பதாக வாதம் செய்தான். அண்ணனுக்குச் சிறிய அளவில்கூடப் பொருள் ஏதும் கொடுக்கவில்லை. அடிக்கடி ஒருவரை ஒருவர் மண்டைஉடைத்துக்கொண்டார்கள். அடிக்கடி நகரப் போலீஸ் ஸ்டேஷன் போனார்கள். ஒருமுறை நியாயவிலைக்கடையில் எழுபது வயசுக்கிழவி யப்பாஎன்னால வரிசையில நிக்கமுடியலப்பா. நான் வாங்கிக்கினுப் போயிடுறேன்டா சாமி‘ என்று தாமஸிடம் கேட்டாள். நீஎனக்கு முன்னாடிப்போனுமாகொஞ்ச நேரம் நின்னாச் செத்துட மாட்டேஎனக்குப் பின்னாலயே நில்லு

அங்கிருந்தவர்கள் பாட்டியைப் பரிதாமாகப் பார்த்தார்கள். தாமஸ் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இனாம் அரிசியை வாங்கினான்.. தன்ராஜ்,தாமஸ் இருவருக்குமான பிள்ளைகள் திருமணங்களைச் சந்திக்கும் நிலைக்கு வந்திருந்தார்கள்சிலருக்கு மணம் முடிந்தும்சிலருக்குமுடிக்கவேண்டிய தருணத்திலும் இருந்தார்கள்.

டேவிட் இருக்கும்போதே இரு பெண்களை வெவ்வேறு இடங்களில் கொடுத்துவிட்டார். அக்காள்தங்கைக்குச் சில ஒழுங்கு முறையின்படிபிள்ளைகள் இருந்தது. சில பிள்ளைகளுக்குக் கலியாணம் முடிந்திருந்தது. சிலருக்கு முடியவில்லை. கணவர்கள்தான் குடும்பத் தலைமை. அரசுஊழியர்கள். வருமானம் இருந்தது. மின் கட்டணம் கட்டவும்மளிகைச் சாமான் மொத்தமாகவும் வாங்கி வருவதும் கணவர்கள்தான்செய்திருந்தார்கள். தங்கள் மாமியாருக்குடேவிட் செய்ததுபோலவே அந்தந்த கணவர்கள் தங்கள்தங்கள் மனைவிகளுக்குச் செய்யும்படியாகஅமைந்தது. ஒரு வரலாற்று நிகழ்வுதான்.

டேவிட் சிறிய மகளின் கணவர் ஒருநாள் விபத்தில் பலியானார். நாற்பத்தியைந்தைத் தொட்டுக்கொண்டு இருக்கலாம். அலுவலகத்தில் மாலைவிடுமுறை சொல்லிவிட்டு வந்தவர் வீட்டுக்கு வந்திருந்தால்மறுநாள் காலையில் வீடுகட்டும் பணிக்குஅடிக்கல் நாட்டப்பட்டிருக்கும். மூத்தபெண்ணின் குழந்தைக்குப் பால் பற்றாக்குறையாக இருந்ததால்அடுத்து ஓரிருநாளில் நாட்டு பசுமாடு வாங்கப்பட்டுஓலை வேயப்பட்ட தடுப்புப்பாத்ரூம் அருகில் இருந்தப்புங்கை மர வேரில் கட்டியிருந்திருப்பார்கள். துக்க நாள் முடிந்து கொஞ்சம் சகஜநிலை வந்திருந்தது. சமயலறையில்கடலைபருப்பு,கடுகு தவிரி மற்ற பொருள்கள் ஏறக்குறைய காலியாக இருந்தது. எப்போதும் பச்சையாகவே உருவிப்போடப்படுகின்றகருவேப்பிலைகள்அதன் இருப்பிடத்தில் காய்ந்துபோன சிறு குச்சிகளாக மிஞ்சியிருந்தது. பிள்ளைகளைக் கரைச்சேர்க்கவேண்டிய கடமையை,நாளுக்கு முப்பது முறை வெவ்வேறு மனிதர்கள் சிறிய பெண்ணிற்கு ஆலோசனையாக வைத்துக்கொண்டிருந்தார்கள். சிறிய பெண் வாழ்நாளில்இதுவரை அறியப்படாதப் புதிய புதிய விஷயங்களுக்காகஒண்ணாவது படிக்கப்போகும் குழந்தையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

நான்குஐந்து வருஷங்கள் கடந்த பிறகு டேவிட்டின் மூத்த மகன் தன்ராஜ் இறந்துவிட்டார். உடல் சரியில்லாதவர்தான்படுத்த படுக்கையாகஇருக்கவில்லை. நடமாடிக்கொண்டேதான் இருந்தார். அரசின் கடைநிலை ஊழியராக வேலைச் செய்தவர். சம்பளக்கவரைப் பிரிக்காமல் தன்மனைவியிடம் கொடுத்தவர். பணி இன்னும் ஆறுஆண்டு மிச்சம் இருந்தது. இழப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் பையன் திருமணம்,பெண்களுக்குப் பாக்கியாக நிற்கும் சில கடைமைகளுக்கும்சற்று நீண்டத் தடை ஏற்பட்டிருக்காது. மறுமகன் வேலையில்லாமல் இருந்ததால்,மாதக்கடனில் பெற்ற ஆட்டோ ரிக்ஷாவைகம்பெனிக்காரன் எடுத்துச் சென்றிருக்கமாட்டான். தன்ராஜ் இயல்பாகச் சண்டையிடக்கூடிய ஆள்இல்லை. பின்னால்மனைவி இருந்தாள். தம்பி வேலையில்லாமல் இருப்பதால் அப்பாவின் பென்ஷனை அனுபவித்துப் போகட்டுமே. அதற்கும்சேர்த்து ஏன் சண்டையிடவேண்டும்.‘ ஊர் முழுக்கப் பேசினார்கள்.

தன்ராஜ் இறந்து ஒருவருஷம் முடிவதற்குள்தம்பி தாமஸ் இறந்துவிட்டார். நாற்பத்தி இரண்டு இருக்கலாம். தாமஸ் மூத்த பெண் தனக்குஇஷ்டமானவனோடு சென்று ஏதோ கோயிலில் இந்து முறைமைப்படிதான் மணம் முடித்துக்கொண்டாள். சம்பந்தபட்டவர்கள் பெரிதாகப்பிரச்சனைக் கிளப்பவில்லை. உயிர் சேதம் மிச்சமானது. இன்னும் இரண்டு பிள்ளைகளுக்குத் திருமணம் முடிக்கவேண்டிய நேரத்தில் இருந்தார்.தாமஸ் சிறு வயதிலிருந்து எந்த வேலைக்கும் போனதே இல்லை. அப்பழக்கந்தான் வாழ்நாள் முழுதும் இருந்தது. பத்தாவது பெயிலான பையன்மீண்டும் முயற்சி இல்லாமல்வேலைகளுக்குப் போகத்தொடங்கி இருந்தான். குடும்பம் மிக நெருக்கடியில் இருந்தபோது அவ்வப்போது தாமஸ்கூலி வேலைக்குப் போனார். குடும்பத்தைப் பல கட்டங்களில் தாமஸ் சாமர்த்தியமாக நடத்திச்சென்றார் என்ற பேச்சு இருந்தது.

நிகழ்வு முடிந்து இரண்டு வருஷ இடைவெளியில் முதல் தலைமுறை காலஞ்சென்ற டேவிட்டின் மூத்த மறுமகன் இறந்துவிட்டார். இன்னும்குறைந்த பட்சம் இருபது வருஷங்களாவது வாழவேண்டிய வயது இருந்தது. கணவனைவிடமனைவிக்குப் பனிரெண்டு வயது குறைவாகவேஇருந்தது. பிள்ளைகள் நன்றாகப் படித்திருந்தார்கள். ஒரே மேடையில கூட இரட்டைத் திருமணங்களை நடத்திவிடலாம். ஒன்றுபோலத் தயாராகஇருந்தார்கள். நல்லது நடக்கவேண்டிய நேரத்தில்நடத்தக்கூடியவர் இல்லாமல் போவதா?, குடும்பம்நிலமை என்னவாகும் ஊர்க்காரர்ப்பேச்சுவாக்கில் சுட்டிக்காட்டுவதுண்டு.
இறந்தவரின் மனைவியின் அண்ணன் மகள்கட்டிப்பிடித்து அழும்போது“ “நாம் என்ன வழிக்கு வந்தோமோ. நம் குடும்பத்திலகுடும்பத்தநடத்திச்செல்கிற ஒரு ஆம்பளைங்களும் நிக்கமாட்றாங்களே. எல்லாரும் ஒருத்தர் பின் ஒருத்தர் போயிட்டாங்களே. வீட்ல பொம்பளைங்களாநிக்கிறோமே“. கதறி அழுதாள். கேட்டு ஊரே அழுதது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்தக் குடும்பத்தில் இத்தனை மரணங்கள் ஏன்நிகழவேண்டும். முதல் தலைமுறை டேவிட் தவிர்த்துப்பார்த்தால்மற்ற அனைவருக்குமேஇருபதுமுப்பது ஆண்டுகள் வாழ்க்கை மிச்சமிருந்தது.சந்ததியின் ஐந்துபேரிடமும்தான் குடும்பத்தை நடத்திச்செல்லும் தலைமைப் பொறுப்பு இருந்தது. தலைமை என்பது வெறும் ஆண் தன்மைக்கானவகையில் அல்ல. வருமானம்சமூகதொடர்புகள்அனுபவம்,போன்றவைகள் சார்ந்திருந்தது. அவர்கள் மரணங்களால் குடும்ப இயல்பு,பிள்ளைகளின் படிப்பையும்குடும்பப் பொருளாதாரத்தையும் பின்னுக்கு இழுத்துச்செல்கிற வேலை நடந்திருக்கிறது. குடும்பத்திற்குத் தலைமைதாங்குகிற பொறுப்பைஅனுபவமே இல்லாத புதிய நபரின் மீது சுமத்துகிற சூழல் உருவாகியிருந்தது.

முதல் தலைமுறையின் தங்கராஜ் மனைவியான முதல் மரணம்கடந்தபிறகு ஏறக்குறைய பத்தாண்டுகள் கழித்துத் தங்கராஜீன் மூத்த மகள்கணவன் இறந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். ஆனாலும்பிள்ளைகளுக்கான கடமையைச் செய்யவேண்டிய பொறுப்புஅவருக்குத் தரப்பட்டிருக்கவில்லை. குடும்பம் அவரால் கடத்தவேண்டும் என்ற சூழல் இருக்கவில்லை. அவைகளை ஆரம்பம் முதலே தங்கராஜ்பார்த்துக் கொண்டிருந்தார். தங்கராஜ் மூத்த மகள்கணவனால் சில நேரங்கள் கிடைக்கிற சுவாரசியங்களை இழந்தாள்என்றாலும் தினந்தோறும்போதை வஸ்த்தின் வாசத்திலிருந்து விடுபட்டிருந்தாள். தங்கராஜ் மூத்த மகளின் பிள்ளைகள் எப்போதும்போல் தாத்தா வீட்டில் இருந்துபள்ளிகளுக்குச் சென்றார்கள்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தங்கராஜீன் இளைய மகனின் மனைவி இறந்துவிட்டாள். குடும்ப வருமானம் மகன் கையில் இருந்தது. அவள் தாராளகுணம் கொண்டவளாக இருந்திருந்தாள். கூட்டுக்குடும்பத்தைச் சிதைப்பதற்கான முரண்டுபிடித்த வேலைகளை ஒருபோதும் செய்திருக்கவில்லை.கூட்டுக்குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் தாங்கிக்கொண்டு உழைத்திருந்தாள். மூன்று பிள்ளைகள் பெற்றிருந்தாள். வாய்க்குவாய்ப் பசிதீர்க்கும் முறைமை முடிந்தபின்,பறவைகள்குஞ்சுகளைத் தனிமைப் படுத்தி விடுவதை ஒத்ததாகபிள்ளைகள் தங்கள் கால்களைக்கழுவிக்கொள்ளும் பக்குவத்தை அடைந்திருந்தார்கள். மரணப்படுக்கையில் இருந்தாள். இறக்கும் ஓரிருநாளில்அவள் அண்ணனைப் பார்த்துப்போனால் போகட்டும் போடா., …யாரடா“. பாடல் பாடினாள்.

எல்லா மரணங்களையும் விட மிக இளம் வயது மரணம் அவளுடையதுதான். அந்த மரணத்தால்சந்தோஷக் கணங்கள் உண்டாக்கித்தருகிறவாய்ப்புகள் கணவனுக்குக் குறைந்துபோனது. குடும்பத் தலைமை அவன் கையில்தான் இருந்தது. பணத்தைக் கொள்ளையிடும் நோயின்ஓயாததொல்லை அவளை இல்லாமல் செய்துவிட்டது.
மனைவி இருக்கும்போதுதினமும் பொரியல்கூடுதலாக ரசம்சாம்பார் எனச் செய்திருந்தாள். கணவன் ஒரு காரக்குழம்புடன் நிறுத்திக்கொள்வதுநடந்தது. குடும்ப அட்டையில் புதிதாகப் பெயர்ப் பதிவு ஏதும் நடக்கவில்லை. பிள்ளைகள் நாளுக்கு நாள் பொறுப்பை உணரும் நிலைஇயல்பாகவந்திருந்தது. குடும்பத் தலைமைக்குக் கூடுதல் உதவிகரமாக இருந்தது.

தங்கராஜ் சின்ன மகனுக்கு அறிமுகமான சிலரின் வாய்சொல் வேறுமாதிரியாக இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் நான்கு பேர் பயணத்திற்குக்காத்திருக்குபோது பேருந்து தாமதமானால், ‘தங்கராஜின் சின்ன மகன் கூட இருப்பதால் அப்படி நடந்திருக்கலாம்.‘ பேசிக்கொண்டார்கள். இன்னும்சில கடினமனம் கொண்டவர்கள்இவன் தகப்பன் செய்த பாவமும்இவன் செய்த மோசங்கங்களின் மூலமும்தான் சின்ன வயதில் மனைவியைஇழந்தான்‘ என்றும் முடிவுசெய்துக்கொண்டார்கள்.

தங்கராஜ் சிறிய மகன் காதுகளில் விழுந்தபோது உண்மையாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எழும்பியிருந்தது. ஆனால்ஏதாவது சிறியசிக்கல்கஷ்டம் வரும்போது மட்டுமேஅந்த அவதூறு வார்த்தைப் பயன்படுகிறது. ஆகையால்அதை நம்பி மெலிந்து போகவேண்டிய அவசியம்இல்லை‘. என்பது சிறிய மகனுக்குத் தெரியவந்திருந்தது.

அவன் ஆய்வின் முடிவில் எழுதினான், ‘எல்லாத்தரப்பு மரணத்தையும் அலசவில்லை. ஆனால்இவ்வாய்வில் கண்டுணர்ந்த இருவகைமரணங்களின் உள்ளடக்கம்ஒரு குடும்ப மரபுக்கு மட்டும் ஒத்துப்போவதில்லை. பொதுவாகக் குடும்பங்களின் தலைமைதுணைத்தலைமைஇருவகை மரணங்களுக்குஒரே வகையான தகுதிச்சான்றைத் தரும்படி இயல்பாகவே அமைந்துவிடுகிறது. இயல்பிற்கு ஒத்தபடித் தலைமை,துணைத்தலைமைப் பதவிகளை இரு பாலினத்திற்கும் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஒன்று ஒடித்து வளர்க்கும் முறை.மற்றொன்று ஓய்வளித்துக் காக்கும் முறை. இரண்டுக்கும் வலி ஒன்றுதான். இரண்டின் நிகழ்வும் ஒரே அர்த்தம்கொண்டதல்ல. இரண்டுமேமுற்றாக அழித்தலுக்கானதும் அல்ல.

ஒரு வகைமையில்இரு தன்மை விளைவது நடக்க முடியாததல்ல. தலைமுறை மரணங்கள்‘ மட்டும்  இயல்பிற்கு விலக்கானதல்ல.

டேனியல். ஜே

No comments: